மாணவர் பாதுகாப்பு: விதிமுறைகள் குறித்து சிபிஎஸ்இ சுற்றறிக்கை

பள்ளியில் பயிலும் மாணவர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்து சிபிஎஸ்இ நிர்வாகம் சுற்றறிக்கை ஒன்றை அனுப்பியுள்ளது.
மாணவர் பாதுகாப்பு: விதிமுறைகள் குறித்து சிபிஎஸ்இ சுற்றறிக்கை


புது தில்லி: பள்ளியில் பயிலும் மாணவர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்து சிபிஎஸ்இ நிர்வாகம் சுற்றறிக்கை ஒன்றை அனுப்பியுள்ளது.

ஹரியாணாவில் உள்ள ரயான் சர்வதேச பள்ளியில் 7 வயது சிறுவன் கொலை செய்யப்பட்ட சம்பவத்தை தொடர்ந்து, மாணவர்களின் பாதுகாப்பு குறித்து சி.பி.எஸ்.இ. பள்ளிகளுக்கு இந்த சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளது.

அந்த சுற்றறிக்கையில், பள்ளி வளாகத்தில் சிசிடிவி கேமரா அமைக்கப்பட வேண்டும்.  பள்ளி ஊழியர்களின் விவரங்களை காவல்துறையினர் மூலம் சரிபார்த்து பிறகு பணியமர்த்த வேண்டும். பள்ளிக்குள் வெளிநபர்களின் நடமாட்டம் என்பதை முற்றிலும் கட்டுப்படுத்த வேண்டும் என்ற விதிகளை அனைத்துப் பள்ளிகளும் கட்டாயம் கடைபிடிக்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com