தடையில்லா விமானப் போக்குவரத்து: இந்தியா-ஜப்பான் இடையே ஒப்பந்தம் கையெழுத்து

இந்தியா-ஜப்பான் இடையே தடையின்றி விமானங்களை இயக்குவதற்கு அனுமதிக்கும் வகையில், இரு நாடுகளுக்கு இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தாகி உள்ளது.

இந்தியா-ஜப்பான் இடையே தடையின்றி விமானங்களை இயக்குவதற்கு அனுமதிக்கும் வகையில், இரு நாடுகளுக்கு இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தாகி உள்ளது.
குஜராத் மாநிலம், காந்தி நகரில் பிரதமர் நரேந்திர மோடி, ஜப்பான் பிரதமர் ஷின்úஸா அபே இடையே வியாழக்கிழமை நடைபெற்ற பேச்சுவார்த்தைக்குப் பிறகு, விமானப் போக்குவரத்தில் ஒத்துழைப்பு அளிப்பது தொடர்பான இந்த ஒப்பந்தம் கையெழுத்தானது.
இதுதொடர்பாக, மத்திய அரசு வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:
இந்தியா-ஜப்பான் இடையோன ஒப்பந்தம், இந்தியாவில் உள்ள விமான நிறுவனங்கள், தங்களது விமானங்களை ஜப்பானில் உள்ள சில குறிப்பிட்ட நகரங்களுக்கு அளவின்றி இயக்க முடியும். இதேபோல், ஜப்பானில் உள்ள விமான நிறுவனங்களும் இந்திய நகரங்களுக்கு தடையின்றி விமானங்களை இயக்க முடியும் என்று அந்தச் செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த ஒப்பந்தத்தால், இரு நாடுகளுக்கு இடையே பயணிகள் போக்குவரத்து அதிகரித்து, தொடர்புகள் அதிகரிப்பதுடன், இரு நாடுகளுக்கு இடையேயான பயணக் கட்டணம் குறையும் என்று யாத்ரா எனும் பயண ஏற்பாட்டு நிறுவனம் தெரிவித்துள்ளது.
தற்போதைய நிலையில், நிப்பான் ஏர்வேஸ், ஜப்பான் ஏர்லைன்ஸ் போன்ற ஜப்பானிய விமான நிறுவனங்கள் இந்தியாவுக்கும், ஏர்-இந்தியா, ஜெட் ஏர்வேஸ் போன்ற இந்திய விமான நிறுவனங்கள் ஜப்பானுக்கும் விமானங்களை இயக்கி வருகின்றன.
2016-ஆம் ஆண்டின் தேசிய விமானப் போக்குவரத்துக் கொள்கையின்படி, சார்க் அமைப்பில் இடம்பெற்றுள்ள நாடுகளுடனும், தில்லியில் இருந்து 5,000 கி.மீ. சுற்று வட்டாரத்தில் உள்ள நாடுகளுடனும் தடையற்ற விமானப் போக்குவரத்து ஒப்பந்தத்தை மேற்கொள்ள முடியும்.
இந்த ஒப்பந்தத்தில், கிரீஸ், ஜமைக்கா, கயானா, செக் குடியரசு, ஃபின்லாந்து,ஸ்பெயின், இலங்கை ஆகிய நாடுகளுடன் இந்திய அரசு கடந்த ஆண்டு கையெழுத்திட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com