ம.பி. வன்முறைச் சம்பவம்: காங். எம்எல்ஏவுக்கு 6 மாத சிறை

மத்தியப் பிரதேச மாநிலத்தில் கடந்த 2011-ஆம் ஆண்டு நிகழ்ந்த வன்முறைச் சம்பவம் தொடர்பான வழக்கில் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த எம்எல்ஏ ஒருவர் உள்பட 12 பேருக்கு 6 மாத சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது.

மத்தியப் பிரதேச மாநிலத்தில் கடந்த 2011-ஆம் ஆண்டு நிகழ்ந்த வன்முறைச் சம்பவம் தொடர்பான வழக்கில் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த எம்எல்ஏ ஒருவர் உள்பட 12 பேருக்கு 6 மாத சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது. மேலும், அவர்கள் அனைவருக்கும் தலா ரூ.1,000 அபராதத்தையும் நீதிமன்றம் விதித்தது.
மத்தியப் பிரதேசத்தின் சிவபுரி பகுதியில் கடந்த 2011-ஆம் ஆண்டில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு காங்கிரஸார் போராட்டம் நடத்தினர். அப்போது ஆட்சியர் ஜான் கிங்ஸ்லி மீது போராட்டக்காரர்கள் கற்களை வீசித் தாக்குதல் நடத்தியதாகவும், பொதுச் சொத்துகளுக்கு சேதம் விளைவித்ததாகவும் கூறப்பட்டது.
இதில் மத்தியப் பிரதேச காங்கிரஸ் எம்எல்ஏ ராம்சிங் யாதவ், முன்னாள் எம்எல்ஏக்கள் ஹரிவல்லப சுக்லா, வீரேந்திர ரகுவன்ஷி உள்பட 12 பேர் மீது குற்றம்சாட்டப்பட்டது. இதுதொடர்பான வழக்கு விசாரணை மாவட்ட கீழமை நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த நிலையில் அதன் மீதான தீர்ப்பை நீதிபதி அபிஷேக் சக்சேனா செவ்வாய்க்கிழமை வெளியிட்டார்.
எம்எல்ஏ உள்ளிட்ட 12 பேரை குற்றவாளி என அறிவித்த நீதிபதி, அவர்கள் அனைவருக்கும் 6 மாதங்கள் சிறைத் தண்டனை விதித்துத் தீர்ப்பளித்தார். மேலும், தலா ரூ.1,000 அபராதம் விதித்தும் அவர் உத்தரவிட்டார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com