ஒடிஸா எம்எல்ஏக்களுக்கு இனி ரூ.1 லட்சம் ஊதியம்

ஒடிஸா சட்டப் பேரவை உறுப்பினர்கள், தலைவர், துணைத் தலைவர், அமைச்சர்கள் ஆகியோரின் ஊதியம், படிகள், ஓய்வூதியத்தை உயர்த்தும் வகையில் பேரவையில் தனித்தனியாக 4 மசோதாக்களை மாநில அரசு

ஒடிஸா சட்டப் பேரவை உறுப்பினர்கள், தலைவர், துணைத் தலைவர், அமைச்சர்கள் ஆகியோரின் ஊதியம், படிகள், ஓய்வூதியத்தை உயர்த்தும் வகையில் பேரவையில் தனித்தனியாக 4 மசோதாக்களை மாநில அரசு வெள்ளிக்கிழமை தாக்கல் செய்தது.
இந்த மசோதாவின் ஷரத்துகளின்படி எம்எல்ஏக்கள் ஊதியம் மற்றும் படிகளாக மாதந்தோறும் ரூ.1 லட்சமும் அமைச்சர்கள் ரூ.97 ஆயிரமும், முதல்வர் மாதாந்திர ஊதியமாக ரூ.98 ஆயிரமும் பெறுவர்.
அதே போல மாதாந்திர ஊதியம் மற்றும் பிற படிகளாக பேரவைத் தலைவருக்கு ரூ.97,500-ம் துணைத் தலைவருக்கு ரூ,.95 ஆயிரமும் கிடைக்கும். அரசுத் தலைமைக் கொறடாவுக்கு மாத ஊதியமாக ரூ.97 ஆயிரமும் அரசுத் தலைமைத் துணைக் கொறடாவுக்கு ரூ.93 ஆயிரமும் அளிக்கப்படும்.
எம்எல்ஏக்களின் ஊதியம் கடைசியாக 2011-ஆம் ஆண்டு மும்மடங்காக உயர்த்தப்பட்டது. மாதந்தோறும் வழங்கப்பட்ட ரூ.21,950 ஊதியம் மற்றும் படிகள் ரூ.60 ஆயிரமாக அதிகரிக்கப்பட்டது.
ஊதியம், வாகனப்படி, பிற படிகள் உள்ளிட்ட முதல்வரின் மாதாந்திர ஊதியம் மற்றும் படிகள் இந்த மசோதா மூலம் ரூ.59 ஆயிரத்தில் இருந்து ரூ.98 ஆயிரமாக உயர்த்தப்பட்டுள்ளது.
கேபினட் அமைச்சருக்கு சரிநிகரான ஊதியமும் படிகளும் பேரவை எதிர்க்கட்சித் தலைவருக்கும் வழங்கப்படும். புதிய ஊதிய நடைமுறை கடந்த ஜனவரி 1-ஆம் தேதி முதல் முன் தேதியிட்டு அளிக்கப்படும் என்று சட்டப் பேரவை விவகாரங்களுக்கான அமைச்சர் பி.கே.அரூக்கா தெரிவித்தார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com