ஓட்டுநர் உரிமத்துடன் ஆதார் எண்ணை இணைக்க அரசு திட்டம்

ஓட்டுநர் உரிமத்துடன் ஆதார் எண்ணை விரைவில் இணைக்க வைப்பது குறித்து அறிவிப்பை வெளியிட திட்டமிட்டு வருவதாக மத்திய அமைச்சர் ரவி சங்கர் பிரசாத் தெரிவித்தார்.
ஓட்டுநர் உரிமத்துடன் ஆதார் எண்ணை இணைக்க அரசு திட்டம்

ஓட்டுநர் உரிமத்துடன் ஆதார் எண்ணை விரைவில் இணைக்க வைப்பது குறித்து அறிவிப்பை வெளியிட திட்டமிட்டு வருவதாக மத்திய அமைச்சர் ரவி சங்கர் பிரசாத் தெரிவித்தார்.
தில்லியில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற "டிஜிட்டல் ஹரியாணா' மாநாட்டில் பங்கேற்று ரவிசங்கர் பிரசாத் பேசியதாவது:
ஆதார் எண்ணை ஓட்டுநர் உரிமத்துடன் இணைக்க வைப்பது குறித்து திட்டமிட்டு வருகிறோம். இதுதொடர்பாக மத்திய சாலைப் போக்குவரத்து, நெடுஞ்சாலை துறை அமைச்சர் நிதின் கட்கரியுடன் கலந்தாலோசித்தேன். இதன்மூலம் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி டிஜிட்டல் மூலம் ஒரு நபரின் அடையாளத்தை உறுதிப்படுத்த முடியும்.
"பான்' எண்ணுடன் ஆதார் எண்ணை இணைக்க வைத்ததன் மூலம் கருப்புப் பணப் பரிமாற்றம் தடுத்து நிறுத்தப்பட்டுள்ளது என்றார் ரவிசங்கர் பிரசாத்.
ஆதார் திட்டம், பொதுமக்களின் தனி உரிமைகளில் தலையிடுகிறதா? என்பது தொடர்பாக உச்ச நீதிமன்றம் இன்னமும் தீர்ப்பு அறிவிக்காமல் உள்ள நிலையில் ரவிசங்கரின் கருத்து மூலம் ஆதார் கட்டாயம் என்பது மீண்டும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com