தொலைதூர இலக்குகளை அழிக்கும் "அஸ்திரா' ஏவுகணை சோதனை வெற்றி

தொலைதூர இலக்குகளையும் துல்லியமாகத் தாக்கவல்ல அதிநவீன"அஸ்திரா' ஏவுகணையானது வங்கக் கடல் பகுதியில் வெற்றிகரமாக சோதிக்கப்பட்டதாக பாதுகாப்புத் துறை தெரிவித்துள்ளது.
தொலைதூர இலக்குகளை அழிக்கும் "அஸ்திரா' ஏவுகணை சோதனை வெற்றி

தொலைதூர இலக்குகளையும் துல்லியமாகத் தாக்கவல்ல அதிநவீன
"அஸ்திரா' ஏவுகணையானது வங்கக் கடல் பகுதியில் வெற்றிகரமாக சோதிக்கப்பட்டதாக பாதுகாப்புத் துறை தெரிவித்துள்ளது.
இதையடுத்து, விமானப் படையில் நிகழாண்டுக்குள் அந்த ஏவுகணை சேர்க்கப்படலாம் எனத் தெரிகிறது.
முழுக்க, முழுக்க உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட "அஸ்திரா" ஏவுகணையை வெற்றிகரமாக சோதனை செய்த பாதுகாப்புத் துறை ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவன (டிஆர்டிஓ) அதிகாரிகளுக்கு அமைச்சர் நிர்மலா சீதாராமன் பாராட்டு தெரிவித்துள்ளார்.
டிஆர்டிஓ மற்றும் இந்திய விமானப் படையின் கூட்டு முயற்சியில் அதிநவீன ஏவுகணையான "அஸ்திரா" வடிவமைக்கப்பட்டது. வானில் இருந்து இலக்குகளைத் தாக்கி அழிக்கவல்ல திறன் கொண்ட அந்த ஏவுகணையானது சுமார் 154 கிலோ எடையுடையது. 20 கிலோ மீட்டரில் இருந்து 110 கிலோ மீட்டர் வரையிலான இலக்குகளைக் கூட துல்லியமாகத் தாக்கும் வல்லமை "அஸ்திரா"வுக்கு உண்டு என டிஆர்டிஓ அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில், ஒடிஸாவின் சந்திப்பூரில் அமைந்துள்ள வங்காள விரிகுடா கடல் பகுதியில் கடந்த 4 நாள்களாக "அஸ்திரா" ஏவுகணை சோதனை தொடர்ச்சியாக மேற்கொள்ளப்பட்டது. விண்ணில் நிர்ணயிக்கப்பட்ட இலக்குகளை சரியாகத் தாக்கியதைத் தொடர்ந்து அந்தச் சோதனை வெற்றிபெற்றதாக அறிவிக்கப்பட்டது.
இதையடுத்து, "அஸ்திரா' விரைவில் விமானப் படையில் இணைக்கப்படும் எனக் கூறப்படுகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com