போலி வருமான வரித்துறை அதிகாரிகள் 6 பேர் தில்லியில் கைது

வருமான அதிகாரிகள் போல் தொழிலதிபர் ஒருவரின் வீட்டில் சோதனையில் ஈடுபட்ட போலி வருமான வரி அதிகாரிகள் 6 பேரை போலீஸார்

புதுதில்லி: வருமான வரித்துறை அதிகாரிகள் போல் தொழிலதிபர் ஒருவரின் வீட்டில் சோதனையில் ஈடுபட்ட போலி வருமான வரித்துறை அதிகாரிகள் 6 பேரை போலீஸார் கைது செய்துள்ளனர்.

தலைநகர் தில்லியின் மல்வியா நகரில் உள்ள தொழிலதிபர் ஒருவரின் வீட்டில் இன்று மாலை 6 மணியளவில் ஐ.டி. சோதனை செய்ய வந்துள்ளதாக கூறிக்கொண்டு 6 பேர் வீட்டில் நுழைந்துள்ளனர்.

பின்னர் அவர்கள் தொழிலதிபர் குடும்பத்தினரிடம் ரூ.20 லட்சம் கேட்டு தொந்தரவு செய்துள்ளனர். இதையடுத்து அக்கம் பக்கத்திலுள்ளவர்கள் கூடி ஆறு பேரையும் சிறைபிடித்துள்ளனர்.

பின்னர் காவல்துறைக்கு தகவல் அளித்தனர். இதையடுத்து சம்பவ இடத்துக்கு வந்த போலீஸார், அவர்களிடம் விசாரணை நடத்தியதில், அவர்கள் ​​6 பேரும் போலி வருமான வரித்துறை அதிகாரிகள் என தெரியவந்தது.

இதையடுத்து அவர்கள் 6 பேரையும் கைது செய்த போலீஸார் அவர்களிடம் இருந்த பணத்தையும் மீட்டுள்ளனர்.

இதுகுறித்து பாதிக்கப்பட்ட தொழிலதிபர் செய்தியாளர்களிடம் கூறுகையில், "சில வருடங்களுக்கு முன்பு இதேபோன்ற ஒரு சம்பவம் நடந்தது, அப்போது காவல்துறையின் பாதுகாப்பை கேட்டேன், பின்னர் அது திரும்பப் பெறப்பட்டதாக தெரிவித்தார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com