உ.பி. முதல்வர், துணை முதல்வர்கள் எம்.எல்.சி.க்களாக நாளை பதவியேற்பு

உத்தரப் பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத், துணை முதல்வர்கள் கேசவ் பிரசாத் மௌர்யா, தினேஷ் சர்மா உள்பட 5 பேர் அந்த மாநில சட்டமேலவை உறுப்பினர்களாக (எம்எல்சி) திங்கள்கிழமை (செப்.18) பதவியேற்கின்றனர்.

இதுகுறித்து அந்த மாநில சட்டமேலவை சிறப்புச் செயலர் சேதிலால், சனிக்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பில், "புதிதாகப் பதவியேற்கவுள்ள எம்எல்சிக்களுக்கு சட்ட மேலவைத் தலைவர் ரமேஷ் யாதவ் பதவிப் பிரமாணம் செய்து வைப்பார்' என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
முதல்வர் யோகி ஆதித்யநாத், துணை முதல்வர்கள் 2 பேர், அந்த மாநில அமைச்சர்கள் ஸ்வதந்திர சிங், மோசின் ரஸா ஆகியோரை எதிர்த்து இடைத்தேர்தலில் யாரும் போட்டியிடாத காரணத்தால் எம்எல்சிக்களாக போட்டியின்றி அவர்கள் தேர்வு செய்யப்பட்டனர். முன்னதாக, அவர்கள் யாரும் சட்டப்பேரவை உறுப்பினராகவோ, சட்டமேலவை உறுப்பினராகவோ பதவி வகிக்க
வில்லை.
அரசியல் சாசனப்படி, முதல்வர், துணை முதல்வர்கள், அமைச்சர்கள் தாங்கள் பொறுப்பேற்ற 6 மாதத்துக்குள் சட்டப்பேரவை அல்லது சட்டமேலவை உறுப்பினராக போட்டியிட்டு வெற்றி பெற வேண்டும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com