வாட்ஸ் அப்-பில் சர்ச்சைக்குரிய விடியோவை பகிர்ந்த பஞ்சாப் எம்.பி.

வாட்ஸ் அப்-பில் சர்ச்சைக்குரிய விடியோவை பகிர்ந்ததாக, ஆம் ஆத்மி கட்சியில் இருந்து இடைநீக்கம் செய்யப்பட்ட பஞ்சாப் எம்.பி. ஹரீந்தர் சிங் கல்சாவிற்கு எதிராக போலீஸில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

வாட்ஸ் அப்-பில் சர்ச்சைக்குரிய விடியோவை பகிர்ந்ததாக, ஆம் ஆத்மி கட்சியில் இருந்து இடைநீக்கம் செய்யப்பட்ட பஞ்சாப் எம்.பி. ஹரீந்தர் சிங் கல்சாவிற்கு எதிராக போலீஸில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக அந்த மாநிலத்தைச் சேர்ந்த சமூக சேவகி ரேணு சோனியா என்பவர், லூதியானா சரக டிஐஜி குர்சரண் சிங் சாதுவிடம் புகார் அளித்துள்ளார்.
அதில், "வாட்ஸ்-அப் குழு ஒன்றில், அந்த சர்ச்சைக்குரிய விடியோவை ஹரீந்தர் பதிவேற்றம் செய்துள்ளார். அந்தக் குழுவில் நானும் உறுப்பினராக இருக்கிறேன். சர்ச்சைக்குரிய விடியோவை பதிவேற்றம் செய்த ஹரீந்தருக்கு எதிராக நடவடிக்கை எடுக்க வேண்டும்' என்று ரேணு சோனியா கூறியுள்ளார்.
இப்புகார் மீது உரிய விசாரணை நடத்தப்படும் என்று டிஐஜி குர்சரண் சிங் சாது தெரிவித்துள்ளார்.
இதனிடையே, அந்த விடியோ பதிவேற்றம் செய்யப்பட்ட போது, தாம் வெளிநாட்டில் இருந்ததாகவும், தனது செல்லிடப்பேசியை உறவினர் வீட்டில் கொடுத்துவிட்டு சென்றிருந்ததாகவும் ஹரீந்தர் கூறியுள்ளார். மேலும், உறவினரின் குழந்தை விளையாட்டாக அந்த விடியோவை பதிவேற்றம் செய்திருக்க
லாம் என்றும் அவர் கூறியுள்ளார்.
முன்னதாக, பஞ்சாப் மாநிலம், ஃபதேபூர் சாகிப் மக்களவைத் தொகுதி ஆம் ஆத்மி எம்.பி.யான ஹரீந்தர் (70), கட்சி விரோத நடவடிக்கைகளில் ஈடுபட்டதாகக் குற்றம்சாட்டி கட்சியில் இருந்து இடைநீக்கம் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com