விலையேற்றத்தை கட்டுப்படுத்த பெட்ரோல், டீசலுக்கு ஜிஎஸ்டி: அமைச்சர் தர்மேந்திர ப்ரதான்

தினசரி விலையேற்றத்தை கட்டுப்படுத்த பெட்ரோல், டீசல் ஆகியவற்றுக்கு ஜிஎஸ்டி முறை அமல்படுத்தப்படும் எனப் பெட்ரோலியத்துறை அமைச்சர் தர்மேந்திர ப்ரதான் திங்கள்கிழமை தெரிவித்தார்.
விலையேற்றத்தை கட்டுப்படுத்த பெட்ரோல், டீசலுக்கு ஜிஎஸ்டி: அமைச்சர் தர்மேந்திர ப்ரதான்

பெட்ரோல், டீசல் விலை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. மேலும், நாட்டின் ஒவ்வொரு மாநிலத்திலும் பல்வேறு விலைகளில் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. அதுமட்டுமல்லாமல் சமீபகாலமாக பெட்ரோல் விலை 7.50 ரூபாய் வரை உயர்ந்துள்ளது.

இந்நிலையில், இந்த நிலையில்லா பெட்ரோல், டீசல் விலையை கட்டுப்படுத்தும் நோக்கத்தோடு அவற்றையும் சரக்கு மற்றும் சேவை வரியின் கீழ் கொண்டு வர உள்ளதாக மத்திய பெட்ரோலியத்துறை அமைச்சர் தர்மேந்திர ப்ரதான் தெரிவித்தார்.

முன்னதாக, ஐதராபாத்தில் நடந்த சரக்கு மற்றும் சேவை வரி மீதான கூட்டத்தின் முடிவில் மத்திய நிதியமைச்சர் அருண் ஜேட்லி, பெட்ரோல் மற்றும் டீசல் ஆகியவற்றை ஜிஎஸ்டி-யில் இணைப்பது தொடர்பான ஆலோசனை தெரிவித்தார்.

அதுகுறித்து அருண் ஜேட்லி கூறியதாவது:

தில்லியில் பெட்ரோல் விலை 70 ரூபாயாக உள்ளது. ஆனால் மும்பையில் லிட்டர் 80 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. இதுவே சரக்கு மற்றும் சேவை வரியில் இதனை இணைப்பதன் மூலம் நாடு முழுவதும் ஒரே வரி முறை அமலாகும். இதனால் நாடு முழுவதும் ஒரு லிட்டர் பெட்ரோல் 38 ரூபாய்க்கு விற்பனை செய்யும் நிலை ஏற்படும் என்றார்.

இதுகுறித்து மத்திய பெட்ரோலியத்துறை அமைச்சர் தர்மேந்திர பர்தான் கூறியதாவது:

நாடு முழுவதும் ஏற்பட்டுள்ள பெட்ரோல், டீசல் விலை உயர்வை கட்டுப்படுத்தவும், ஒரே சீரான விலையில் விற்பனை செய்வதற்கு ஏற்றதாக இருக்க வேண்டுமானால் அவை உடனடியாக ஜிஎஸ்டி முறைக்கு கீழ் கொண்டு வர வேண்டும். இதுதொடர்பாக அனைத்து மாநிலங்களும், ஜிஎஸ்டி கூட்டமைப்பும் ஒத்துழைக்க வேண்டும். இதன்மூலம் பெட்ரோல், டீசல் விலையை நம்மால் சுலபமாக கணிக்க முடியும் என்றார்.

தற்போது பல்வேறு காரணங்களாலும், மாநில வாட் வரி மற்றும் விநியோகஸ்தர் பங்கு உள்ளிட்ட காரணங்களாலும் பெட்ரோல் மற்றும் டீசல் விலை கட்டுப்படுத்த முடியாத விலையேற்றங்களைச் சந்தித்து வருகிறது. 

ஆனால், சரக்கு மற்றும் சேவை வரியின் கீழ் இது அமல்படுத்தப்பட்டால் 12 சதவீத நேரடி வரியுடன் தற்போதைய சூழ்நிலையில் நாடு முழுவதும் 38 ரூபாய்க்கு விற்பனை செய்யக்கூடிய நிலை ஏற்படும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com