தீர்ப்பாய உத்தரவுகளை திருத்தும் அதிகாரம் நாடாளுமன்றத்துக்கு உண்டு: மத்திய அரசு வாதம்

காவிரி வழக்கில் தீர்ப்பாய உத்தரவுகள் நாடாளுமன்ற முடிவுகளுக்கு கட்டுப்பட்டது என்று மத்திய அரசு புதிய வாதத்தை முன் வைத்துள்ளது.
தீர்ப்பாய உத்தரவுகளை திருத்தும் அதிகாரம் நாடாளுமன்றத்துக்கு உண்டு: மத்திய அரசு வாதம்


புது தில்லி: காவிரி வழக்கில் தீர்ப்பாய உத்தரவுகள் நாடாளுமன்ற முடிவுகளுக்கு கட்டுப்பட்டது என்று மத்திய அரசு புதிய வாதத்தை முன் வைத்துள்ளது.

காவிரி நடுவர் மன்ற இறுதித் தீர்ப்பு இறுதியானது என்று கூறப்பட்டு வந்த நிலையில், மத்திய அரசு இவ்வாறு புதிய வாதத்தை முன் வைத்திருப்பது தமிழக விவசாயிகளுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

காவிரி நடுவர் மன்ற வழக்கு உச்ச நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, காவிரி பிரச்னைக்கு நிரந்தர தீர்வு காண மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என உச்ச நீதிமன்றம் அறிவுறுத்தியது. 

அப்போது, மத்திய அரசு தரப்பில் கூறப்பட்டதாவது, தீர்ப்பாய உத்தரவை திருத்தும் அதிகாரம் நாடாளுமன்றத்துக்கு உண்டு. நடுவர் மன்ற தீர்ப்பை திருத்தவோ, மாற்றவோ நாடாளுமன்றத்துக்கு அதிகாரம் உள்ளது. நடுவர் மன்ற தீர்ப்பை செயல்படுத்த என்றுமே பின்வாங்கியதில்லை. காவிரி நடுவர் மன்றத்தை அமைப்பது தொடர்பாக நடவடிக்கை எடுத்து வருகிறோம். 

காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பது என்பது நாடாளுமன்றத்தில் விவாதித்து எடுக்க வேண்டிய ஒன்று. நதிநீர் பங்கீடு விவகாரத்தில் அனைத்து மாநிலங்களுக்கும் பேதமின்றி மத்திய அரசு செயல்பட்டு வருகிறது என்றும் மத்திய அரசு விளக்கம் அளித்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com