மின் உற்பத்தியிலும், நுகர்விலும் இந்தியா முதலிடம் பிடிக்கும்

சர்வதேச அளவில் மின் உற்பத்தியிலும், நுகர்விலும் இந்தியா முதலிடம் பிடிக்கும் என்று மத்திய மின்சாரத் துறை இணையமைச்சர் (தனிப்பொறுப்பு) ஆர்.கே. சிங் கூறியுள்ளார்.
மின் உற்பத்தியிலும், நுகர்விலும் இந்தியா முதலிடம் பிடிக்கும்

சர்வதேச அளவில் மின் உற்பத்தியிலும், நுகர்விலும் இந்தியா முதலிடம் பிடிக்கும் என்று மத்திய மின்சாரத் துறை இணையமைச்சர் (தனிப்பொறுப்பு) ஆர்.கே. சிங் கூறியுள்ளார்.
பாட்னாவில் செய்தியாளர்களிடம் திங்கள்கிழமை பேசிய அவர் மேலும் கூறியதாவது: சர்வதேச அளவில் அதிகமாக மின் உற்பத்தி செய்யும் நாடுகளில் இந்தியா 3-ஆவது இடத்தில் உள்ளது. ஆனால், மின் நுகர்வில் இந்தியா 4-ஆவது இடமே பிடித்துள்ளது. எனினும், மின் உற்பத்தியிலும், நுகர்விலும் இந்தியா முதலிடம் பிடிக்கும். இந்த இலக்கை எட்டுவதற்காக கால நிர்ணயம் எதுவும் செய்யப்படவில்லை. மின் நுகர்வு அதிகரிப்பது என்பது நாட்டின் வளர்ச்சியைக் காட்டும் ஓர் அளவுகோலாகும். மின்சாரத்தில் இயங்கக் கூடிய பொருள்களை மக்கள் அதிகம் வாங்கி உபயோகிக்கும்போது நாட்டின் மின் நுகர்வு அதிகரிக்கும். நாட்டின் எந்த இடத்திலும் எப்போதும் மின்வெட்டு இருக்கக் கூடாது என்பதே மத்திய அரசின் இலக்காகும். 
மின்துறையில் பிகார் அரசு சிறப்பாக செயல்பட்டு வருகிறது. முக்கியமாக கிராமப் பகுதிகளில் மின்சார வசதி செய்து தருவதில் பிற மாநிலங்களைவிட பிகார் முன்னிலையில் உள்ளது. பிகாரில் செயல்படுத்தப்பட்டு வரும் பல்வேறு மின் திட்டங்களுக்கு மத்திய அரசு தொடர்ந்து நிதியளித்து வருகிறது என்றார் அவர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com