மும்பையில் கனமழை: பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை; ரயில், விமானங்கள் சேவை பாதிப்பு

மகாராஷ்டிரா மாநிலம் மும்பையில் நேற்று செவ்வாய்க்கிழமை பெய்ந்த கனமழையால் ரயில்கள் போக்குவரத்து நெரிசல் காரணமாக
மும்பையில் கனமழை: பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை; ரயில், விமானங்கள் சேவை பாதிப்பு


மும்பை: மகாராஷ்டிரா மாநிலம் மும்பையில் நேற்று செவ்வாய்க்கிழமை பெய்ந்த கனமழையால் ரயில்கள் போக்குவரத்து நெரிசல் காரணமாக பாதிக்கப்பட்டுள்ளது.

இரண்டாவது முறையாக மும்பையில் கன மழை பெய்தது. நாட்டின் நிதி மையமான மும்பையில் கனமழையால் ரயில், சாலை மற்றும் விமான போக்குவரத்துகள் முற்றிலுமாக முடக்கியது. பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் இன்று விடுமுறை அளிக்கப்பட்டுள்ளனர். மும்பை விமான நிலையத்திற்கு வரவேண்டிய 56 விமானங்கள் வேறு விமான நிலையங்களுக்கு திருப்பி அனுப்பப்பட்டுள்ளன.

கடுமையான மழை காரணமாக ஐந்து மேற்கு ரயில்வே ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. மழை காரணமாக உள்ளூர் ரயில்கள் சேவையில் தாமதம் ஏற்பட்டுள்ளதால் பல்வேறு இடங்களில் பயணிகள் தவித்து வருகின்றனர். மழை நீர் பாதிக்கப்பால் சாலை போக்குவரத்தும் பெருமளவு பாதிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், அடுத்த 24 மணி நேரத்தில் மும்பைக்கு அருகில் உள்ள ரெய்காட் மாவட்டத்தில் மிக இன்று 12.03 மணியளவில் 4.54 மீட்டர் அளவுக்கு அதிகயளவு மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.
இதையடுத்து நேற்று மும்பையில் உள்ள பள்ளி கல்லூரிகள் செல்படாத நிலையில் இன்றும் புதன்கிழமை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

மோசமான வானிலை மற்றும் ஒடுபாதை சரியில்லாத காரணத்தால் விமான சேவை பாதிக்கப்பட்டுள்ளது.

ஞாயிறு காலை 8.30 மணி முதல் இரவு 11.30 மணி வரை 225.5 மிமீ மழை பெய்துள்ளது. மூன்று மணி நேரத்தில் (5.30-8.30 மணி) 100 மில்லிமீட்டர் பதிவாகி உள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com