ரூபாய் நோட்டு வாபஸுக்கு பின் வங்கிகளுக்கு திரும்பிய பணத்தை ஏழைகளின் நலனுக்கு பயன்படுத்த வேண்டும்: வெங்கய்ய நாயுடு

உயர் மதிப்புடைய ரூபாய் நோட்டுகள் வாபஸ் நடவடிக்கைக்கு பின், வங்கிகளுக்கு திரும்பி வந்த பணத்தை, சமூகத்தில் பொருளாதார ரீதியாக நலிவடைந்த பிரிவினரின் நலத் திட்டங்களுக்கு
தேசிய தாழ்த்தப்பட்டோர், பழங்குடியின (எஸ்சி/எஸ்டி) தொழில்முனைவோர் மாநாட்டில் பங்கேற்ற குடியரசு துணைத் தலைவர் வெங்கய்ய நாயுடுவுக்கு நினைவுப் பரிசாக மரக்கன்றை வழங்குகிறார் மத்திய இணையமைச்சர் கிரிராஜ் சிங
தேசிய தாழ்த்தப்பட்டோர், பழங்குடியின (எஸ்சி/எஸ்டி) தொழில்முனைவோர் மாநாட்டில் பங்கேற்ற குடியரசு துணைத் தலைவர் வெங்கய்ய நாயுடுவுக்கு நினைவுப் பரிசாக மரக்கன்றை வழங்குகிறார் மத்திய இணையமைச்சர் கிரிராஜ் சிங

உயர் மதிப்புடைய ரூபாய் நோட்டுகள் வாபஸ் நடவடிக்கைக்கு பின், வங்கிகளுக்கு திரும்பி வந்த பணத்தை, சமூகத்தில் பொருளாதார ரீதியாக நலிவடைந்த பிரிவினரின் நலத் திட்டங்களுக்கு பயன்படுத்த வேண்டும் என்று குடியரசு துணைத் தலைவர் வெங்கய்ய நாயுடு தெரிவித்தார்.
தில்லியில் புதன்கிழமை நடைபெற்ற தேசிய தாழ்த்தப்பட்டோர், பழங்குடியின (எஸ்சி/எஸ்டி) தொழில்முனைவோர் மாநாட்டில், வெங்கய்ய நாயுடு பங்கேற்றார். அப்போது, அவர் பேசியதாவது: ரூபாய் நோட்டு வாபஸ் நடவடிக்கைக்கு பின், நாட்டில் ஏற்கெனவே புழக்கத்தில் இருந்த உயர் மதிப்புடைய நோட்டுகளில் சுமார் 99 சதவீதம் அளவுக்கு வங்கிகளுக்கு திரும்பி வந்துவிட்டன. படுக்கை அறை, குளியல் அறை, தலையணையின் உள்ளே என பதுக்கப்பட்டிருக்கும் பணத்தை தேடிச் சென்று கைப்பற்றுவதற்கு பதிலாக, அவை தாமாகவே வங்கிகளுக்கு திரும்பி வந்துவிட்டன. இது, நல்ல விஷயம் தானே. இதை சிலர் விமர்சிப்பது வியப்பளிக்கிறது.
ரூபாய் நோட்டு வாபஸ் நடவடிக்கைக்கு பின் வங்கிகளுக்கு திரும்பியுள்ள பணத்தை, சமூகத்தில் பொருளாதார ரீதியாக நலிவடைந்தோரின் நலத் திட்டங்களுக்கு பயன்படுத்த வேண்டும்.
பொதுவாக ஏழை மக்கள் கடன் பெற்றால், அதனை முறையாக திருப்பிச் செலுத்தமாட்டார்கள் என்ற தவறான கருத்து நிலவுகிறது. பணக்காரர்களே, மோசடியில் ஈடுபவர் என்பதை நாம் கண்கூடாக பார்த்திருக்கிறோம் (வங்கிக் கடனை திருப்பிச் செலுத்தாத விஜய் மல்லையா போன்ற தொழிலதிபர்களை மறைமுகமாக சாடும் வகையில் நாயுடு இவ்வாறு கூறினார்).
கடந்த 2012-ஆம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்ட பொது கொள்முதல் கொள்கையின்படி, மத்திய அரசின் அமைச்சகங்கள், பல்வேறு துறைகள் மற்றும் பொதுத் துறை நிறுவனங்கள், தங்களுக்கான மொத்த கொள்முதலில் சுமார் 4 சதவீதத்தை தாழ்த்தப்பட்ட, பழங்குடியின தொழில்முனைவோரிடம் இருந்து கொள்முதல் செய்ய வேண்டும். ஆனால், அவர்களிடம் இருந்து மிக குறைவான அளவிலேயே பொருள்கள் கொள்முதல் செய்யப்படுகின்றன. அதற்கான காரணம் என்ன என்பதை மத்திய அரசு கண்டறிய வேண்டும்.
தாழ்த்தப்பட்ட, பழங்குடியின சமூக தொழில்முனைவோருக்கு, சுமுகமான சூழலை ஏற்படுத்தி தர வேண்டும். அதுவே, நாட்டின் பொருளாதாரத்தில் குறிப்பிடத்தக்க மாற்றத்தை ஏற்படுத்தும் என்றார் வெங்கய்ய நாயுடு.
இந்த நிகழ்ச்சியில் பேசிய மத்திய நிதித்துறை இணையமைச்சர் பிரதாப் சுக்லா, மத்திய சிறு, குறு, நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை இணையமைச்சர் கிரிராஜ் சிங், உயரதிகாரிகள் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com