சட்டப்படி ஒவ்வொருவரும் எவ்வளவு தங்கம் வைத்திருக்கலாம்?

பண்டிகைக் காலம் தொடங்கிவிட்டது. பெண்கள் பலரும் தங்க நகைகள் வாங்க ஆர்வம் காட்டுவதும் இந்த காலங்களில்தான். 
சட்டப்படி ஒவ்வொருவரும் எவ்வளவு தங்கம் வைத்திருக்கலாம்?


பண்டிகைக் காலம் தொடங்கிவிட்டது. பெண்கள் பலரும் தங்க நகைகள் வாங்க ஆர்வம் காட்டுவதும் இந்த காலங்களில்தான். 

எனவே, இந்த நேரத்துக்கு ஏற்ற ஒரு விஷயத்தை நாம் விரிவாகப் பார்க்கலாம்.

எந்த பயமும் இல்லாமல், வருமான வரித்துறையின் அச்சுறுத்தல்களுக்கு எல்லாம் அலட்டிக் கொள்ளாமல், நாம் ஒவ்வொருவரும் அதிகபட்சமாக எவ்வளவு தங்க நகைகளை வைத்திருக்கலாம் என்று அறிந்து கொள்ள அனைவருமே விரும்புவார்கள்.

ஒருவர் சட்ட விரோதமாக சம்பாதித்தாரா? வருமான வரி ஏய்ப்பில் ஈடுபட்டாரா என்பதெல்லாம் அடுத்தபட்சம்தான். ஒருவரின் வீட்டில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை என்ற பெயரில் நுழைந்துவிட்டாலே, அந்த நபரின் பெயருக்கும், புகழுக்கும் உத்தரவாதம் இல்லை.

ஆனால், இதுபோன்ற பிரச்னைகளுக்கு எல்லாம் நீங்கள் பயப்படவே வேண்டாம், நீங்கள் வைத்திருக்கும் சொத்துக்களை சேர்த்ததற்கான சரியான வருவாயை காட்டுவதாக இருந்தால் என்று வருமான வரித்துறை நிபுணர்கள் கூறுகிறார்கள்.

அதாவது கடந்த 2016ம் ஆண்டு டிசம்பர் மாதம் 1ம் தேதி மத்திய அரசால் வெளியிடப்பட்ட அறிக்கை, ஒரு நபர் வைத்திருக்கும் தங்கத்தின் அளவு பற்றி தெளிவான அறிக்கையை வெளியிட்டது.

அதில், ஒரு நபர், அதிக தங்க நகைகளை வைத்திருக்க எந்த கட்டுப்பாடும் இல்லை. ஆனால், அந்த தங்க நகைகள் எந்த வருவாயில் வாங்கப்பட்டது என்பது குறித்து விளக்க வேண்டும். 

முறையாக வரி கட்டும் ஒருவரின் வீட்டில் சோதனை நடத்தப்பட்டு, அங்கிருந்து கைப்பற்றப்பட்ட தங்கத்தின் மதிப்பு, அவரது வருவாயை விட கூடுதலாக இருக்கும்பட்சத்தில் அது சிக்கலை ஏற்படுத்தும்.

அதே சமயம், ஒருவருக்கு நிர்ணயிக்கப்பட்ட அளவை விட அதிகமாக தங்கம் இருந்தால் அது உடனடியாக பறிமுதல் செய்யப்படாது. 

அதாவது, திருமணமான பெண்கள் - 500 கிராம்
திருமணமாகாத பெண்கள் - 250 கிராம்
ஆண்கள் - 100 கிராம் வரை தங்கம் வைத்திருக்கலாம்.

ஆனால், ஒரு வீட்டில் சோதனை நடத்தப்பட்டு, இந்த நிர்ணயிக்கப்பட்ட அளவை விட கூடுதலாக தங்க நகை இருந்தாலும் அதனை பறிமுதல் செய்ய முடியாது. ஏன் என்றால், அது பாரம்பரிய அல்லது குடும்ப நகையாக இருக்கலாம்.

தங்க நகைக்கு எந்தவிதமான சான்றுகளை அளிக்க முடியும்?
தங்க நகை வாங்கும் போது கடைக்காரரால் அளிக்கப்பட்ட ரசீதுகள் மிக முக்கிய சான்றாகும். ஒரு வேளை பாரம்பரியமாகவோ, பரிசாகவோக் கிடைத்த தங்கமாக இருந்தால், அதன் உண்மையான உரிமையாளர் பெயர் கொண்ட ரசீதை அளிக்கலாம். ஆனால் இதுபோன்ற சான்றுகள் எதுவுமே இல்லையென்றால், தங்கம் கைப்பற்றப்பட்ட நபரின் குடும்பப் பின்னணி, நிதிநிலை போன்றவையும் வருமான வரித்துறை அதிகாரிகளால் சீராய்வுக்கு எடுத்துக் கொள்ளப்படும்.

முன்னெச்சரிக்கையாக என்ன செய்யலாம்?
ஒவ்வொருவரும் குறிப்பிட்ட அளவிலேயே தங்கம் வைத்திருந்தாலும், குடும்ப உறுப்பினர்கள் அனைவரது தங்கத்தையும் கணக்கில் கொள்ளும்போது அதிகமாக இருக்கும் பட்சத்தில், வங்கிகளில் ஒவ்வொருவருக்கும் தனித்தனி வங்கி லாக்கர்களை வைத்திருப்பது நல்லது. ஒருவேளை வருமான வரித்துறை சோதனையின் போது தனித்தனி லாக்கர்கள் என்பதால் பெரிய சிக்கல் ஏற்படாது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com