தலைமை நிதி ஆலோசகராக அர்விந்த் சுப்ரமணியன் ஓராண்டுக்கு நீட்டிப்பு

தலைமை நிதி ஆலோசகராக அர்விந்த் சுப்ரமணியன் ஓராண்டுக்கு நீட்டிப்பு

இந்தியாவின் தலைமை நிதி ஆலோசகர் பதவிக்கு அர்விந்த் சுப்ரமணியன் ஓராண்டுக்கு நீட்டிக்கப்பட்டுள்ளார்.

இந்திய அரசின் தலைமை நிதி ஆலோசகராக அர்விந்த் சுப்ரமணியன் கடந்த 2014-ம் ஆண்டு அக்டோபர் 16-ந் தேதி நியமிக்கப்பட்டார். 3 ஆண்டுகளுக்கான பதவிக்காலம் இம்மாதத்துடன் முடிவடைகிறது.

இந்நிலையில், தலைமை நிதி ஆலோசகராக அர்வி்ந்த் சுப்ரணியத்தின் தொடரும் விதமாக அவரது பதவிக்காலம் மேலும் ஓராண்டுக்கு நீட்டிக்கப்பட்டுள்ளது.

அர்விந்த் சுப்ரமணியன் தில்லியில் உள்ள செயின்ட் ஸ்டீஃபன்ஸ் கல்லூரியில் பட்டம் பெற்றார். பின்னர் அகமதாபாத்தில் உள்ள ஐஐஎம் மற்றும் ஆக்ஸ்ஃபோர்ட் பல்கலைக்கழகத்தில் நிதி தொடர்பான பட்ட மேற்படிப்பை நிறைவு செய்தார்.

இந்திய அரசின் தலைமை நிதி ஆலோசகராக இருந்த ரகுராம் ராஜன், ரிசர்வ் வங்கி கவர்னராக பதவியேற்றதைத் தொடர்ந்து கடந்த 2013-ம் ஆண்டு செப்டம்பரில் இப்பதவியில் இருந்து விலகினார்.

இதைத்தொடர்ந்து அர்விந்த் சுப்ரமணியன் தலைமை நிதி ஆலோசகராக செயல்பட்டு வருகிறார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com