ஏழுமலையானுக்கு ரூ.11 கோடியில் சகஸ்ர காசு மாலை நன்கொடை

திருப்பதி ஏழுமலையானுக்கு ரூ. 11 கோடியில் புதிய சகஸ்ர காசுமாலை (படம்) நன்கொடையாக வழங்கப்பட்டது.
ஏழுமலையானுக்கு ரூ.11 கோடியில் சகஸ்ர காசு மாலை நன்கொடை

திருப்பதி ஏழுமலையானுக்கு ரூ. 11 கோடியில் புதிய சகஸ்ர காசுமாலை (படம்) நன்கொடையாக வழங்கப்பட்டது.
ஏழுமலையானுக்கு கடந்த 2013-ஆம் ஆண்டு ஃ சிபி (ள்ண்ச்ண்) நிறுவனத் தலைவர் ராமலிங்கராஜூ சகஸ்ர காசுமாலை (1,008 காசுகளால் ஆன மாலை) செய்யவும், திருச்சானூர் பத்மாவதி தாயார் கோயிலில் அன்னதானம் வழங்கவும் ரூ. 16 கோடி நன்கொடை வழங்கினார். அதனைப் பெற்றுக்கொண்ட தேவஸ்தானம் ரூ. 11 கோடியில் 30 கிலோ தங்கத்தில் ஏழுமலையானுக்கு சகஸ்ர காசுமாலையை தயார் செய்தது. 
இந்நிலையில், ஏழுமலையான் கோயிலுக்குள் இந்த காசுமாலையை ராமலிங்கராஜூ, ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு முன்னிலையில் தேவஸ்தானத்திடம் சனிக்கிழமை சமர்ப்பித்தார். 
இந்த காசுமாலை மூலவர் ஏழுமலையானுக்கு அணிவிக்கப்பட உள்ளது. காசுமாலை தயாரித்தது போக மீதம் உள்ள ரூ. 5 கோடி திருச்சானூர் பத்மாவதி தாயார் கோயிலின் அன்னதான திட்டத்துக்கு அளிக்கப்பட்டது. இதேபோல், மைசூர் மகாராஜா வழங்கிய 32 கிலோ தங்கத்தால் ஆன சகஸ்ர காசு மாலை ஏழுமலையானுக்கு அணிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. 
இதனால் புதிய காசுமாலையை ஏழுமலையானுக்கும், பழைய காசு மாலையை வாகன சேவையின்போது, உற்சவமூர்த்திகளுக்கும் அணிவிக்க தேவஸ்தானம் முடிவு செய்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com