காஷ்மீரில் 6-ம் நூற்றாண்டை சேர்ந்த கல் சிவன் சிற்பம் கண்டெடுப்பு!

காஷ்மீரில் முதல் முறையாக 6-ஆம் நூற்றாண்டை சேர்ந்த அரிதான ஒரு முகம் கொண்ட கல் சிவன் சிலை ஒன்று நீர்நிலையில் இருந்து
காஷ்மீரில் 6-ம் நூற்றாண்டை சேர்ந்த கல் சிவன் சிற்பம் கண்டெடுப்பு!

ஸ்ரீநகர்: காஷ்மீரில் முதல் முறையாக 6-ஆம் நூற்றாண்டை சேர்ந்த அரிதான ஒரு முகம் கொண்ட கல் சிவன் சிலை ஒன்று நீர்நிலையில் இருந்து கண்டெடுக்கப்பட்டுள்ளது.

ஜம்மு மற்றும் காஷ்மீரில் உள்ள ஸ்ரீநகரின் புறநகர் பகுதியான ஹர்வான் கார்டன் என்ற பகுதியில் நேற்று சனிக்கிழமை நீர்த்தேக்கத்தில் நீர்ப்பாசனம் மற்றும் வெள்ளம் கட்டுப்பாட்டு பணிகளில் தொழிலாளர்கள் ஈடுபட்டு கொண்டிருந்தனர். அப்போது அவர்களது கையில் 2.5 அடி உயரம் கொண்ட ஒரு முகமுடை மிக பழமையான கல் சிவன் சிலை ஒன்று கிடைத்துள்ளது. 

இதையடுத்து அந்த சிலையை அவர்கள் சுத்தம் செய்து காவல்துறையினரிடம் ஒப்படைத்துள்ளனர். அவர்கள் அந்த சிலையை தொல்பொருளியல் மற்றும் அருங்காட்சியகம் துறை அதிகாரிகளிடம் ஒப்படைத்துள்ளனர். 

தற்போது அந்த சிலையானது ஸ்ரீநகரில் உள்ள எஸ்.ஆர்.எஸ் மியூசியம் லால் மண்டி ஆவணக்காப்பகம் மற்றும் அருங்காட்சியகங்களில் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளது.

மிக அரிதான, முட்டை வடிவிலான ஒரு முகம், மூக்கு மற்றும் கண்கள் கொண்ட சிவன் சிலையான இது 6-ஆம் நூற்றாண்டை சேர்ந்தது. காஷ்மீரில் முதன்முறையாக இதுபோன்ற ஒரு சிலை கிடைத்துள்ளது எனவும் சிவன் முழுமையான அலங்காரத்துடன் இருப்பதாகவும் அத்துறையின் இயக்குநர் முகமது சஃபி கூறியுள்ளார். 

ஹர்வான் பகுதி பிரபலமான பாரம்பரியம் மிக்க பகுதியாக உள்ளதுடன் தொல்பொருள் ஆய்வுக்கான முக்கியத்துவம் வாய்ந்த பகுதியாகவும் உள்ளது. இங்கு புத்த மதம் சார்ந்த மிக பழமையான இடங்களும் உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com