திறந்த வெளியில் மலம் கழித்தவர்களுக்கு ராஞ்சி நகராட்சியின் வினோத தண்டனை! 

போதுமான அளவு பிரச்சாரங்கள் செய்த பின்னரும் திறந்த வெளியில் மலம் கழிதது வந்தவர்களுக்கு ராஞ்சி நகராட்சி ஒரு வினோத தண்டனை வழங்கியுள்ளது. 
திறந்த வெளியில் மலம் கழித்தவர்களுக்கு ராஞ்சி நகராட்சியின் வினோத தண்டனை! 

ராஞ்சி: போதுமான அளவு பிரச்சாரங்கள் செய்த பின்னரும் திறந்த வெளியில் மலம் கழிதது வந்தவர்களுக்கு ராஞ்சி நகராட்சி ஒரு வினோத தண்டனை வழங்கியுள்ளது. 

ராஞ்சி நகராட்சியில் உள்ள பெரும்பாலான வார்டுகளில் பொது மக்கள் இன்னும் திறந்த வெளியில் மலம் கழிக்கும் பழக்கத்தினை மேற்கொண்டுள்ளனர்.இதனை ஒழிக்க ராஞ்சி நகராட்சி நிர்வாகம் சார்பில் போதுமான  அளவு பிரச்சாரங்கள் செய்த பின்னரும் பெரிய முன்னேற்றம் இல்லை. 

இதன் காரணமாக நகராட்சி நிர்வாகம் அதிரடியாக செயலில் இறங்க முடிவு செய்தது. அதன்படி நேற்று முதல் ஒரு புதிய திட்டம் அமலுக்கு வந்தது. அதன்படி ராஞ்சி நகரத்தினை முழுமையாக திறந்த வெளி மலம் கழிக்கும் பழக்கம் நீக்கப்பட்ட பகுதியாக மாற்ற முடிவு செய்தது. அதற்காக கடைசி தேதியாக செப்டம்பர் 30 முடிவு செய்யப்பட்டது.

அதனை அமல்படுத்த தடையாக இருப்பவர்களுக்கு தண்டனை கொடுக்கவும் முடிவு செய்யப்பட்டது.       அதன்படி நேற்று வார்டுகளுக்கு உட்பட்ட பகுதிகளில் திறந்த வெளியில் மலம் கழிக்க வந்தவர்களுக்கு அதிர்ச்சி காத்திருந்தது.ராஞ்சி நகராட்சி நிர்வாக ஊழியர்கள் அவர்களது லுங்கிகளை வலுக்கட்டாயமாக கைப்பற்றினர். இனி இத்தகைய செயல்களில் ஈடுபட மாட்டோம் என்று உறுதிமொழி குடுத்த பின்னரே அவர்களது லுங்கி மீண்டும் வழங்கப்பட்டது. அதில் 20 பேருக்கு மட்டுமே ரூபாய் 100 அபராதமாக விதிக்கப்பட்டது.

இது தொடர்பாக ராஞ்சி நகராட்சி நிர்வாக மேலாளர் சஷி பிரகாஷ் செய்தியாளர்களிடம் கூறியதாவது:

திறந்த வெளியில் மலம் கழிப்பது என்பது எத்தனை அவமானகரமான செயல் என்பதை அவர்களுக்கு உணர்த்தவே இத்தகைய நடவடிக்கை எடுக்கப்பட்டது. பிடிபட்டவர்களில் நிறைய பேர்களது இல்லத்தில் கழிவறை வசதி உள்ளது. ஆனாலும் அவர்கள் திறந்த வெளியில்தான் மலம் கழிக்கின்றனர். தற்பொழுது முதல்  அவர்கள் வீட்டில் உள்ள கழிவறைகளைப் பயன்படுத்துவதாக உறுதி எடுத்துள்ளனர்.

தகுந்த பயனாளிகளுக்கு பிரதமரின் 'ஸ்வச் பாரத்' திட்டத்தின் கீழ் கழிப்பறை கட்ட நிதி கொடுக்கப்பட்டு உள்ளது. அத்துடன் இதனை ஒழிக்க ராஞ்சி நகராட்சி நிர்வாகம் சார்பில் போதுமான  அளவு விழிப்புணர்வு பிரச்சாரங்கள் செய்யப்பட்டுள்ளது. இப்பொழுது விதிகளை மீறுபவர்களை தண்டிக்க வேண்டிய நேரம்.

இந்த தணடனை தவிர அவர்களுக்கு சிறிய உடற்பயிற்சிகள் மற்றும் தொலைதூரத்தில் கொண்டு சென்று விட்டு அங்கிருந்து நடக்க வைத்தல் உள்ளிட்ட தணடனைகளும் பரிசீலனையில் உள்ளன.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com