ஊழல் ஒழிப்பில் சமரசமில்லை

ஊழலை முழுமையாக ஒழிக்க நான் மேற்கொண்டுள்ள போரில் எவ்வித சமரசத்துக்கும் இடமில்லை என்று பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.
ஊழல் ஒழிப்பில் சமரசமில்லை

ஊழலை முழுமையாக ஒழிக்க நான் மேற்கொண்டுள்ள போரில் எவ்வித சமரசத்துக்கும் இடமில்லை என்று பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.
தில்லியில் திங்கள்கிழமை நிறைவடைந்த பாஜக தேசிய செயற்குழுக் கூட்டத்தில் 13 மாநில முதல்வர்கள், 6 துணை முதல்வர்கள், 60-க்கும் மேற்பட்ட மத்திய அமைச்சர்கள், பாஜக எம்.பி., எம்எல்ஏ, எம்எல்சிக்கள், கட்சியின் மாநிலத் தலைவர்கள் உள்பட பலர் பங்கேற்றனர். இதில் செய்தியாளர்கள் பங்கேற்க அனுமதிக்கப்படவில்லை. எனினும், கூட்டத்தில் மோடி பேசியதை மத்திய நிதியமைச்சர் அருண் ஜேட்லி செய்தியாளர்களிடம் பகிர்ந்து கொண்டார். கூட்டத்தில் மோடி பேசியதாவது:
இப்போது எதிர்க்கட்சியாக உள்ளவர்கள் முன்பு ஆட்சியில் இருந்தபோது, அதிகாரத்தை சந்தோஷமாக அனுபவித்து வந்தனர். இப்போது எதிர்க்கட்சியாகிவிட்ட நிலையில் எவ்வாறு செயல்படுவது என்று அவர்களுக்குத் தெரியவில்லை. ஊழலுக்கு எதிராக நான் நடத்தி வரும் போரில் எவ்வித சமரசத்துக்கும் இடமில்லை. ஊழல் செய்தவர்கள் யாரும் நடவடிக்கைகளில் இருந்து தப்ப முடியாது. எனது உறவினர்கள் யாரும் ஆட்சி அதிகாரத்தில் பங்கேற்கவில்லை.
எதிர்க்கட்சிகள் கடுமையான வார்த்தைகளைப் பயன்படுத்தி அரசை விமர்சிப்பதன் மூலம் அவர்கள் கூறுவது உண்மை என்றாகிவிடாது. மத்திய அரசு மக்களின் நம்பிக்கைகளின் மையமாக உள்ளது. கட்சித் தலைவர்கள் மக்கள் பிரச்னைகளையும் அரசையும் இணைக்கும் பாலமாகத் திகழ வேண்டும். 
அரசியல் கட்சிகளுக்கு தேர்தல் என்பது ஒரு பகுதிதான். நமது கட்சி தேர்தலுக்கு அப்பாற்பட்டு செயல்பட்டு பெரும்பான்மையான மக்களைச் சென்றடைய வேண்டும். கட்சித் தொண்டர்கள் அனைவரின் பங்களிப்பு இருந்தால் மட்டுமே இது சாத்தியமாகும் என்று மோடி பேசினார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com