சிறந்த கல்வி: ரூ.26.21 கோடி திரட்டிய இந்திய தொண்டு நிறுவனம்

இந்தியாவில் வறுமை நிலைக்குக் கீழே வாழும் சிறார்களுக்கு கல்வி அளிப்பதற்காக மும்பையில் செயல்பட்டுவரும் 'பிரதாம்' என்ற அரசுசாரா அமைப்புக்கு (என்ஜிஓ) ரூ.26.21 கோடி நிதி கிடைத்துள்ளது.

இந்தியாவில் வறுமை நிலைக்குக் கீழே வாழும் சிறார்களுக்கு கல்வி அளிப்பதற்காக மும்பையில் செயல்பட்டுவரும் 'பிரதாம்' என்ற அரசுசாரா அமைப்புக்கு (என்ஜிஓ) ரூ.26.21 கோடி நிதி கிடைத்துள்ளது.
அமெரிக்காவின் நியூயார்க் நகரில் ஆண்டுதோறும் நடைபெறும் என்ஜிஓ மாநாடு புதன்கிழமை நடைபெற்றது.
வறுமை நிலைக்கு கீழே வாழும் சிறார்களுக்கு சிறந்த கல்வியை அளிப்பதற்காக கடந்த 1995-ஆம் ஆண்டு மும்பையில் 'பிரதாம்' என்ற என்ஜிஓ தொடங்கப்பட்டது.
கடந்த 20 ஆண்டுகளாக 5 கோடிக்கும் அதிகமான சிறார்களுக்கு இந்த அமைப்பு சிறந்த கல்வியை அளித்து வருகிறது. இந்த அமைப்பின் கல்வித் திட்டங்களுக்கு பல்வேறு விருதுகளும் கிடைத்துள்ளன. அதன் தலைமைச் செயல் அதிகாரி பிரதாம் ருக்மணி பானர்ஜி கூறுகையில், 'எங்கள் அமைப்புக்கு கூகுள் நிறுவனம் தொடர்ந்து ஆதரவளித்து வருகிறது. இந்தியாவில் வறுமை காரணமாக கல்வி கிடைக்காமல் இருக்கும் 10 கோடி சிறார்களுக்கு கல்வி புகட்டுவதே எங்கள் இலக்கு' என்றார்.
விருது பெற்ற கல்வித் திட்டங்களுக்காக ரூ.1.7 கோடி நிதி உதவியும் இந்த அமைப்புக்குக் கிடைத்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com