'நம் தேசத்தின் அச்சுறுத்தல்களுக்கு எதிராக போராட வேண்டும்'

நம் தேசத்தின் அச்சுறுத்தல்களுக்கு எதிராக போராட வேண்டும் என தில்லியில் நடந்த தசரா விழாவில் குடியரசுத்தலைவர் பேசினார்.
'நம் தேசத்தின் அச்சுறுத்தல்களுக்கு எதிராக போராட வேண்டும்'

நாடு முழுவதும் தசரா பெருவிழா இன்று வெகு விமரிசையாகக் கொண்டாடப்படுகிறது. நவராத்திரி விழாவின் கடைசி 10-ஆவது நாள் இந்த விழா நடைபெறும்.

ஒவ்வொரு வருடமும் தில்லியில் உள்ள செங்கோட்டையில் அமைந்திருக்கும் ராம்லீலா மைதானத்தில் தரசா பெருவிழா விமரிசையாகக் கொண்டாடப்படும். 

இதில், குடியரசுத்தலைவர் ராம்நாத் கோவிந்த், துணைக் குடியரசுத்தலைவர் வெங்கய்யா நாயுடு மற்றும் பிரதமர் நரேந்திர மோடி, முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

குடியரசுத்தலைவர் ராம்நாத் கோவிந்த் பேசியதாவது:

ராமரின் வாழ்கையே நமது இன்றைய வாழ்க்கை முறைக்கு சிறந்த உதாரணம். ஆனால், ராமரைப் போற்றினால் தான் நிஜவாழ்வில் நாம் வெற்றிபெற முடியும். நமக்கு கற்றுக்கொள்ள ஏராளமானவை உள்ளன.

அதில் முக்கியமானது எந்தப் பொருளிலும், எந்த மனிதரிலும் உயர்ந்தவர், தாழ்ந்தவர் என்ற வேற்றுமை இல்லை. எந்த செயலைச் செய்தாலும் அதில் முழு உணர்வுடனும், அர்ப்பணிப்புடம் செய்தல் அவசியம். நேர்மையுடனும், தேசத்துக்காக செய்கிறோம் என்ற எண்ணமும் அவசியம். இதனால் நாம் செய்யும் அனைத்து காரியங்களும் வெற்றியடையும், நமது தேசமும் முன்னேறும்.

இந்த தரசா திருநாளில் எவ்வாறு தீயவை அகன்று நன்மை வெற்றியடைவதைப் போன்று நாம் அனைவரும் இந்த தேசத்தின் தீய அச்சுறுத்தல்களாக விளங்கும் ஊழல், வறுமை, பயங்கரவாதம், கல்வியறிவின்மை உள்ளிட்டவகளை எதிர்த்துப் போராட வேண்டும் என்றார்.

பிரதமர் நரேந்திர மோடி பேசியதாவது:

விழாக்கள் கொண்டாடுவது என்பது கற்றலையும், அறிவையும் வளர்த்துக்கொள்வது போன்றது. இந்திய தேசத்தில் நாம் கொண்டாடும் அனைத்து பண்டிகை, திருவிழாக்களிலும் ஒற்றுமை மேலோங்கும், உற்சாகம் பிறக்கும், அறிவு தெளிவுபெறும்.

இதுவே நம்நாட்டின் கலாசாரம் மற்றும் பாரம்பரியம். நமது இந்த சிறப்புகுரிய விழாக்கள் அனைத்துமே விவசாயம், நதி, கடல் உள்ளிட்ட இயற்கைகளை கொண்டாடுவது போன்று அமைந்துள்ளது.

அனைத்து பண்டிகை கொண்டாட்டங்களும் வரலாற்றுடன் ஒன்றுபட்டது. அதில் நம் கலாசாரமும், பாரம்பரியமும் உள்ளது என்றார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com