எஸ்.சி., எஸ்.டி. சட்ட விவகாரம்: உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசு சீராய்வு மனு தாக்கல்! 

எஸ்.சி., எஸ்.டி. சட்ட விவகாரத்தில் உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்புக்கு எதிராக மத்திய அரசு சீராய்வு மனு தாக்கல் செய்துள்ளதாக நாடாளுமன்ற விவகாரத்துறை அமைச்சர் அனந்தகுமார் தெரிவித்துள்ளார். 
எஸ்.சி., எஸ்.டி. சட்ட விவகாரம்: உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசு சீராய்வு மனு தாக்கல்! 

புதுதில்லி: எஸ்.சி., எஸ்.டி. சட்ட விவகாரத்தில் உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்புக்கு எதிராக மத்திய அரசு சீராய்வு மனு தாக்கல் செய்துள்ளதாக நாடாளுமன்ற விவகாரத்துறை அமைச்சர் அனந்தகுமார் தெரிவித்துள்ளார். 

எஸ்.சி, எஸ்.டி. வன்கொடுமைச் சட்டத்தின் பயன்பாடு தொடர்பான வழக்கு ஒன்றை அண்மையில் விசாரித்த உச்ச நீதிமன்றம், எஸ்.சி, எஸ்.டி. வன்கொடுமைச் சட்டத்தின் கீழ் உடனடியாக கிரிமினல் வழக்குகள் பதிவு செய்யவும், கைது நடவடிக்கை மேற்கொள்ளவும் தடை விதித்து தீர்ப்பளித்தது.

உச்ச நீதிமன்றத்தின் இந்த தீர்ப்பானது 1989-ஆம் ஆண்டைய எஸ்.சி., எஸ்.டி. வன்கொடுமை தடுப்புச் சட்டத்தை நீர்த்துப் போகச் செய்துவிடும் என்று மத்திய அரசுக்கு எதிர்கட்சிகள் வலியுறுத்தின. எனவே  இந்த தீர்ப்பை சீராய்வு செய்யக்கோரி, உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசு மனு தாக்கல் செய்ய வேண்டும் என்று பல்வேறு தரப்பினரும் தொடர்ந்து அரசை வலியுறுத்தி வருகின்றனர்.

மத்திய அமைச்சர் ராம் விலாஸ் பாஸ்வான் தலைமையில் தேசிய ஜனநாயகக் கூட்டணியில் உள்ள எஸ்.சி. எஸ்.டி. சமூக எம்.பி.க்கள், பிரதமர் நரேந்திர மோடியை அண்மையில் சந்தித்து இதுதொடர்பாக கோரிக்கை மனுவை அளித்தனர்.

அதேபோல், குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்தை காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி உள்ளிட்ட எதிர்க்கட்சிகளின் தலைவர்கள் சந்தித்து உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பு குறித்து முறையிட்டனர்.

இதனைத் தொடர்ந்து, மத்திய சட்டத் துறை அமைச்சர் ரவிசங்கர் பிரசாத்துக்கு உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பை சீராய்வு செய்யக்கோரி மனு தாக்கல் செய்வது தொடர்பாக மத்திய சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் துறை அமைச்சர் தாவர்சந்த் கெலாட் கடிதம் எழுதினார்.

இந்நிலையில் எஸ்.சி., எஸ்.டி. சட்ட விவகாரத்தில் உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்புக்கு எதிராக மத்திய அரசு சீராய்வு மனு தாக்கல் செய்துள்ளதாக நாடாளுமன்ற விவகாரத்துறை அமைச்சர் அனந்தகுமார் தெரிவித்துள்ளார். 

திங்களன்று மக்களவையில் இன்று பலத்த அமளிக்கிடையே காங்கிரஸ் நாடாளுமன்ற குழுத் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, இதுதொடர்பாக கேள்வி எழுப்பினார். அப்பொழுது அவருக்கு விளக்கமளித்து நாடாளுமன்ற விவகாரத்துறை அமைச்சர் அனந்தகுமார் கூறியதாவது:

எஸ்.சி., எஸ்.டி. சட்ட விவகாரத்தில் உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்புக்கு எதிராக மத்திய அரசு சீராய்வு மனு தாக்கல் செய்துள்ளது. இந்த விவகாரத்தில் பிரதமர் மோடியின் அரசு முழுமையாக பட்டியல் வகுப்பினர் பக்கம்தான் இருக்கிறது.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com