நாடாளுமன்றத்தில் தெலுங்கு தேசம் எம்.பி-க்கள் உள்ளிருப்பு போராட்டம்

ஆந்திர மாநில சிறப்பு அந்தஸ்து விவகாரம் தொடர்பாக தெலுங்கு தேசம் கட்சி எம்.பி-க்கள் வியாழக்கிழமை உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
நாடாளுமன்றத்தில் தெலுங்கு தேசம் எம்.பி-க்கள் உள்ளிருப்பு போராட்டம்

ஆந்திர மாநிலத்துக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கும் விவகாரம் தற்போது உச்சகட்டத்தை எட்டியுள்ளது. பிரிவினைக்குப் பின்னர் ஆந்திர மாநிலத்துக்கு சிறப்பு அந்தஸ்து வழங்க வேண்டும் என தெலுங்கு தேசம் கட்சித் தலைவரும், ஆந்திர முதல்வருான சந்திரபாபு நாயுடு தொடர்ந்து கடந்த சில மாதங்களாக கோரிக்கை வைத்து வந்தார்.

இதுகுறித்து பிரதமர் நரேந்தி மோடியிடம் வலியுறுத்த பலமுறை முயற்சி செய்தும் அனுமதி மறுக்கப்பட்டதாக குற்றச்சாட்டை முன்வைத்தார். பின்னர் மார்ச் 16-ஆம் தேதி வரை கெடு விதித்தார். இதையடுத்து மத்திய தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்து விலகினார். மேலும் மத்திய அரசுக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வந்தார்.

தற்போது நடைபெற்று வரும் பட்ஜெட் கூட்டத்தொடர் முழுவதும் தெலுங்கு தேசம் கட்சியின் எம்.பி-க்கள் இந்த கோரிக்கையை வலியுறுத்தி நாடாளுமன்றத்தில் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அதன் ஒரு பகுதியாக வியாழக்கிழமை உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

மாநிலங்களவை ஒத்திவைக்கப்பட்ட பின்பும் அங்கிருந்து வெளியேறாத தெலுங்கு தேசம் கட்சி எம்.பி-க்கள் தொடர் உள்ளிருப்பு போராட்டம் நடத்தினர். இதனால், தொட்டா சீதாராம லஷ்மி, சி.எம்.ரமேஷ், முட்டம்மசெட்டி ஸ்ரீநிவாஸ ராவ் ஆகியோருக்கு உடல்நிலை மோசமடைந்தது. அவை மருத்துவர் உடனடியாக அவர்களுக்கு சிகிச்சை அளித்தார். பின்னர் அங்கிருந்து மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர்.

இதையடுத்து, உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்ட தெலுங்கு தேசம் கட்சி எம்.பி-க்கள் அவைக்காவலர்களால் உடனடியாக வெளியேற்றப்பட்டனர். இதனால் அங்கு
பரபரப்பான சூழ்நிலை காணப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com