எம்.பி.க்களின் இத்தகைய செயல்பாடு நாடாளுமன்ற ஜனநாயகத்துக்கு நல்லதல்ல: வெங்கய்ய நாயுடு வேதனை! 

அவை நடவடிக்கையை குலைக்கும் எம்.பி.க்களின் செயல்பாடுகள் நாடாளுமன்ற ஜனநாயகத்துக்கு நல்லதல்ல என்று மாநிலங்களவை தலைவர் வெங்கய்ய நாயுடு வேதனை தெரிவித்துள்ளார்.
எம்.பி.க்களின் இத்தகைய செயல்பாடு நாடாளுமன்ற ஜனநாயகத்துக்கு நல்லதல்ல: வெங்கய்ய நாயுடு வேதனை! 

புதுதில்லி: அவை நடவடிக்கையை குலைக்கும் எம்.பி.க்களின் செயல்பாடுகள் நாடாளுமன்ற ஜனநாயகத்துக்கு நல்லதல்ல என்று மாநிலங்களவை தலைவர் வெங்கய்ய நாயுடு வேதனை தெரிவித்துள்ளார்.

தற்போதைய மாநிலங்களவை நடப்புக் கூட்டத்தில் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கக் கோரி அதிமுக எம்.பி.க்களும், ஆந்திராவுக்கு சிறப்பு அந்தஸ்து கோரி தெலுங்கு தேசம் எம்.பி.க்களும், நம்பிக்கை இல்லாத் தீர்மானத்தை எடுக்கக் கோரி காங்கிரஸ் கூட்டணி கட்சி எம்.பி.க்களும் தொடர்ந்து கடும் அமளியில் ஈடுபட்டனர். இதனால் அவையின் நடவடிக்கைகள் கடுமையாக பாதிக்கப்பட்டன.

இந்நிலையில் அவை நடவடிக்கையை குலைக்கும் எம்.பி.க்களின் செயல்பாடுகள் நாடாளுமன்ற ஜனநாயகத்துக்கு நல்லதல்ல என்று மாநிலங்களவை தலைவர் வெங்கய்ய நாயுடு வேதனை தெரிவித்துள்ளார்.

நடப்பு பட்ஜெட் கூட்டத்தொடரின் இரண்டாவது அமர்வு வெள்ளியுடன் நிறைவுக்கு வந்தது. கடைசி நாளான இன்று மாநிலங்களவைத் தலைவர் வெங்கய்யா நாயுடு அவை நடவடிக்கைகள் குறித்து பேசியதாவது:

'பட்ஜெட் கூட்டத்தொடரின் இரண்டாவது அமர்வில் 44 மணி நேரம் மட்டுமே அவை ஒழுங்காக செயல்பட்டுள்ளது. 121 மணிநேரம் எம்.பி.க்கள் அமளி, குழப்பத்தால் ஒத்திவைக்கப்பட்டு வீணடிக்கப்பட்டுள்ளது.

இந்த கூட்டத்தில் கடந்த 27 நாட்களில் ஒரு முறை கூட கேள்விநேரம் எடுத்துக் கொள்ளப்படவில்லை.

பல்வேறு ஆக்கபூர்வமான விவாதங்கள் நடைபெற வேண்டிய அவையில் இந்த அமர்வில் எம்.பி.க்கள் அமளியில் காரணமாக முக்கியத்துவம் இழந்துள்ளது. இந்த அவையில் பல்வேறு முக்கியத்துவம் சார்ந்த விஷயங்களை விவாதிக்க முடியாமல் போய்விட்டது மிகுந்த வேதனை அளிக்கிறது.

எம்.பி.க்களின் இதுபோன்ற செயல்பாடு நாடாளுமன்ற ஜனநாயகத்துக்கு நல்லதல்ல. இதன் காரணமாக எதிர்க்கட்சிகள் மட்டுமின்றி ஆளும் அரசு மற்றும் மக்கள் ஆகிய அனைவரும் நேரத்தை இழந்து விட்டனர்.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com