சிறுமிகள் பாலியல் வல்லுறவு விவகாரத்தில் குற்றவாளிகள் தப்ப முடியாது: பிரதமர் மோடி 

சிறுமிகள் பாலியல் வல்லுறவு விவகாரத்தில் குற்றவாளிகள் யாராக இருந்தாலும் தப்ப முடியாது என்று தில்லியில் நடந்த நிகழ்ச்சியொன்றில் பிரதமர் மோடி பேசியுள்ளார்.
சிறுமிகள் பாலியல் வல்லுறவு விவகாரத்தில் குற்றவாளிகள் தப்ப முடியாது: பிரதமர் மோடி 

புதுதில்லி: சிறுமிகள் பாலியல் வல்லுறவு விவகாரத்தில் குற்றவாளிகள் யாராக இருந்தாலும் தப்ப முடியாது என்று தில்லியில் நடந்த நிகழ்ச்சியொன்றில் பிரதமர் மோடி பேசியுள்ளார்.

ஜம்மு காஷ்மீரின் கத்வா மாவட்டத்தில் நாடோடி இஸ்லாமிய சமூகத்தைச் சேர்ந்த 8 வயது சிறுமி ஆசிபா பாஜக பிரமுகர்கள் மற்றும் காவல் துறையினரால் கொடூரமான முறையில் பாலியல் வல்லுறவு செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளார். இந்த விவகாரமானது நாடு முழுவதும் கடுமையான அதிர்ச்சி அலைகளைக் கிளப்பியுள்ளது 

அதேபோல உத்தரப் பிரதேச மாநிலம் உன்னாவ் பகுதியில் இளம்பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்ததாக  பாஜக எம்.எல். ஏ குல்தீப் சிங்கை சிபிஐ கைது செய்துள்ளது.

அதேசமயம் 'இந்தியாவே காத்திருக்கிறது; பேசுங்கள்' என்று நாட்டையே உலுக்கியுள்ள கத்வா மற்றும் உன்னாவ் பாலியல் வழக்குகள் தொடர்பாக பிரதமர் மோடிக்கு ராகுல்காந்தி ட்விட்டரில் கேள்வி எழுப்பி இருந்தார்.

இந்நிலையில் சிறுமிகள் பாலியல் வல்லுறவு விவகாரத்தில் குற்றவாளிகள் யாராக இருந்தாலும் தப்ப முடியாது என்று தில்லியில்நடந்த நிகழ்ச்சியொன்றில் பிரதமர் மோடி பேசியுள்ளார்.

தில்லியில் வெள்ளியன்று நடந்த அம்பேத்கர் தேசிய நினைவு இல்லத் திறப்பு விழாவில் பிரதமர் மோடி கலந்து கொண்டார். நினைவு இல்லத்தினை  திறந்து வைத்த பின்பு நிகழ்வில் பிரதமர் மோடி பேசியதாவது:

சிறுமிகள் பாலியல் வல்லுறவு விவகாரத்தில் குற்றவாளிகள் யாராக இருந்தாலும் தப்ப முடியாது. நமது மகள்களுக்கு உரிய நீதி கிடைக்கும். குற்றவாளிகள் எந்த காரணத்திற்காகவும் தப்பிக்க விடப்பட மாட்டார்கள். நமது நாகரீக சமுதாயத்தில் இத்தகைய பாலியல் குற்றங்கள் என்பது வெட்கக கேடானது.

இவ்வாறு அவர் பேசியுள்ளார்.    

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com