ஆராய்ச்சிப் படிப்பு மாணவர்களில் பெண்களை விட ஆண்களே அதிகம்

இந்தியாவில் ஆராய்ச்சிப் படிப்புகளில் ஈடுபடும் மாணவர்களில், பெண்களை விட ஆண்களின் எண்ணிக்கையே அதிகளவில் இருப்பதாக மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சக தரவுகள் தெரிவிக்கின்றன.

இந்தியாவில் ஆராய்ச்சிப் படிப்புகளில் ஈடுபடும் மாணவர்களில், பெண்களை விட ஆண்களின் எண்ணிக்கையே அதிகளவில் இருப்பதாக மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சக தரவுகள் தெரிவிக்கின்றன.
அந்த அமைச்சக தரவுகளில் கடந்த 3 ஆண்டு தரவுகளை பிடிஐ செய்தி நிறுவனம் மதிப்பீடு செய்துள்ளது.
அதன்படி, ஆராய்ச்சிப் படிப்புகளில் ஈடுபடும் மாணவர்களின் எண்ணிக்கை மொத்தமாக அதிகரித்துள்ளது. நாடு முழுவதும் உள்ள பல்கலைக்கழகங்களில் கடந்த 2014-15 காலகட்டத்தில் 1,00,792 பேர் ஆராய்ச்சிப் படிப்புகளுக்காக தங்களை பதிவு செய்துகொண்டனர். இதுவே, 2015-16 காலகட்டத்தில் 1,09,552-ஆகவும், 2016-17 காலகட்டத்தில் 1,23,712-ஆகவும் அதிகரித்துள்ளது. இதில், இருபால் மாணவர்களை ஒப்பிடுகையில், பெண்களை விட ஆண்களின் எண்ணிக்கை அதிகமாக உள்ளது.
2014-15 காலகட்டத்தில் ஆராய்ச்சிப் படிப்புகளில் ஈடுபட்ட பெண்களின் எண்ணிக்கையோடு ஒப்பிடுகையில், ஆண்களில் 21,000 பேர் அதிகமாக இருந்தனர். அதேபோல், 2015-16 காலகட்டத்தில் 21,688 ஆண்களும், 2016-17 காலகட்டத்தில் 21,882 ஆண்களும் அதிகம் இருந்தனர். தேசிய முக்கியத்துவம் வாய்ந்த கல்வி நிறுவனங்களை விட, மாநிலங்களில் உள்ள பல்கலைக்கழகங்களிலேயே அதிக எண்ணிக்கையிலான மாணவர்கள் ஆராய்ச்சி படிப்புகளில் பதிவு செய்துள்ளனர். 2016-17 கல்வியாண்டில் மாநில பல்கலைக்கழகங்களில் 41,566 பேர் ஆராய்ச்சி படிப்புகளுக்காக இணைந்த நிலையில், அதே காலகட்டத்தில் தேசிய முக்கியத்துவம் வாய்ந்த கல்வி நிறுவனங்களில் 26,012 பேர் மட்டும் இணைந்துள்ளனர்.
இதேபோல், 2016-17 காலகட்டத்தில் ஆராய்ச்சிப் படிப்புக்காக 17,715 மாணவர்கள் மத்திய பல்கலைக்கழங்களில் பதிவு செய்துள்ள நிலையில், 16,595 மாணவர்கள் தனியார் பல்கலைக்கழகங்களில் பதிவு செய்துள்ளனர். இதே நிலையே 2014-15, 2015-16 காலகட்டத்திலும் காணப்பட்டுள்ளது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com