கோடை நெருங்குகிறது; 153 மாவட்டங்களில் கடும் வறட்சி ஏற்படும்: வானிலை

கடும் கோடை காலம் நெருங்க உள்ள நிலையில், நாட்டின் பல மாவட்டங்கள் வறட்சியின் கோர முகத்தைக் காண உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
கோடை நெருங்குகிறது; 153 மாவட்டங்களில் கடும் வறட்சி ஏற்படும்: வானிலை


புது தில்லி: கடும் கோடை காலம் நெருங்க உள்ள நிலையில், நாட்டின் பல மாவட்டங்கள் வறட்சியின் கோர முகத்தைக் காண உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இந்த நிலையில், வானிலை ஆய்வு மையம் அளித்திருக்கும் தற்போதைய புள்ளி விவரத்தின் அடிப்படையில், 2017 அக்டோபர் முதல் மழை அளவு மிகக் குறைந்த அளவிலேயே இருந்ததால், நாட்டின் 404 மாவட்டங்கள் மோசமானது முதல் மிக மோசமானது வரையிலான வறட்சியைச் சந்திக்க உள்ளதாகக் கூறப்பட்டுள்ளது.

இந்த 404 மாவட்டங்களில் 140 மாவட்டங்கள் கடுமையான வறட்சியின் கோரப் பிடியில் சிக்க உள்ளது. மேலும் 109 மாவட்டங்களில் ஓரளவுக்கு வறட்சியும், 156 மாவட்டங்களில் வறட்சியும் நிலவும் என்று முன்கணிக்கப்பட்டுள்ளது.

கடந்த ஜனவரி முதல் மார்ச் வரையிலான கால கட்டத்தில் ஏற்பட்ட மிகக் குறைந்த மழையின் அளவால் 153 மாவட்டங்களில் கடும் வறட்சி நிலவும்.

ஒவ்வொரு ஆண்டும் கோடைக் காலத்தில் நாட்டின் பல்வேறு பகுதிகளில் குடிநீர் பஞ்சம் ஏற்படுவது வழக்கம்தான் என்றாலும், கடந்த ஆணடு மிக மோசமான பருவ மழை காரணமாக இந்த முறை கடும் குடிநீர் பஞ்சத்தை எதிர்கொள்ள நேரிடும் என்று அஞ்சப்படுகிறது. அதே போல, கடந்த ஜனவரி முதல் பிப்ரவரி வரையிலான காலக்கட்டத்திலும், மார்ச் மாதம் முதல் ஏப்ரல் வரை பெய்யும் மழையின் அளவானது முறையே 63% மற்றும் 31 சதவீதம் குறைந்திருப்பதும் குறிப்பிடத்தக்கது.

மிக மோசமான வறட்சியைச் சந்திக்கும் மாவட்டங்கள் அதிகமாக வடக்கு, மத்திய மற்றும் மேற்கு மாவட்டங்களாக இருப்பதாகவும், கிழக்குப் பகுதியை எடுத்துக் கொண்டால் பிகார் மற்றும் ஜார்க்கண்டில் சில பகுதிகள் இருப்பதாகவும் கூறப்படுகிறது.

குறிப்பாக, பஞ்சாப், ஹரியாணா, உத்தரப்பிரதேகம், ராஜஸ்தான் உள்ளிட்ட மாநிலங்களைச் சேர்ந்த மாவட்டங்களே கடும் வறட்சியைச் சந்திக்கப் போகும் மாவட்டங்களாகும்.

அதே போல சமீபத்தில் அரசு வெளியிட்ட புள்ளி விவரத்திலும், ஏப்ரல் 12ம் தேதி நிலவரப்படி 91 பெரிய அணைகளில் இருக்கும் தண்ணீரின் சராசரி 25% மட்டுமே. இந்த அளவானது கடந்த ஆண்டு தண்ணீர் இருப்பை விட 16 சதவீதம் குறைவு, கடந்த 10 ஆண்டு சராசரியைக் கணக்கில் கொண்டால் 10% குறைவாகும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com