ஆளில்லா விமானப் பயன்பாட்டுக்கு விரைவில் புதிய கட்டுப்பாடுகள்

ஆளில்லா விமானப் பயன்பாட்டுக்கு விரைவில் புதிய கட்டுப்பாடுகள்

ஆளில்லா விமானப் பயன்பாடு மற்றும் அந்த தொழில்நுட்பத்தை பயன்படுத்துவது தொடர்பாக விரைவில் புதிய கட்டுப்பாடுகளும், விதிகளும் வெளியிடப்படும் என்று மத்திய

ஆளில்லா விமானப் பயன்பாடு மற்றும் அந்த தொழில்நுட்பத்தை பயன்படுத்துவது தொடர்பாக விரைவில் புதிய கட்டுப்பாடுகளும், விதிகளும் வெளியிடப்படும் என்று மத்திய உள்நாட்டு விமானப் போக்குவரத்துத் துறை அமைச்சர் ஜெயந்த் சின்ஹா கூறியுள்ளார்.
இந்திய தொழிலகக் கூட்டமைப்பு (சிஐஐ) சார்பில் இந்தியா-பிரான்ஸ் பாதுகாப்பு மற்றும் விமானத் துறை ஒத்துழைப்பு மாநாடு தில்லியில் திங்கள்கிழமை நடைபெற்றது. இதில் பங்கேற்ற அமைச்சர் ஜெயந்த் சின்ஹா பேசியதாவது:
ஆளில்லாத விமானங்கள் சட்டவிரோத செயல்களுக்கு பயன்படுத்துவதைத் தடுக்கும் நோக்கில் சர்வதேச ஆளில்லா விமானங்கள் கூட்டமைப்பு உருவாக்கப்பட்டுள்ளது. இதில் ஆளில்லா விமான பயன்பாடு மற்றும் அந்த தொழில்நுட்பத்தை பயன்படுத்துவது தொடர்பாக பல்வேறு விதிகளும், கட்டுப்பாடுகளும் உள்ளன. இந்த விதிகள் பிரான்ஸ் உதவியுடன் இந்தியாவிலும் அமல்படுத்தப்பட இருக்கிறது.
இது தொடர்பாக நமது நாட்டில் உள்ள விசாரணை அமைப்புகள், ஆளில்லா விமானத் தயாரிப்பு நிறுவனங்கள், இந்தத் துறை தொடர்பான ஆய்வு மற்றும் மேம்பாட்டுப் பணிகளை மேற்கொண்டுள்ள நிறுவனங்களுடன் ஆலோசனை நடத்தப்பட இருக்கிறது.
இந்திய உள்நாட்டு விமானத் துறையை மேம்படுத்த பிரான்ஸ் நாட்டில் உதவி நாடப்பட்டுள்ளது. அந்நாட்டு விமானத் தயாரிப்பு நிறுவனங்களுக்கு இந்திய மிகப்பெரிய உற்பத்தி மையமாக இருக்கும்.
இந்திய விமானப் போக்குவரத்துத் துறை மிகக் குறுகிய காலத்தில் பெரிய வளர்ச்சியைக் கண்டுள்ளது. மேலும், மற்ற நாடுகளுடன் ஒப்பிடும்போது இந்தியாவில் இத்துறையில் பெரிய வளர்ச்சி வாய்ப்புகள் உள்ளன. ஏனெனில், எதிர்காலத்தில் இந்தியாவில் பல நகரங்களுக்கு இப்போது இருப்பதைவிட பல மடங்கு அதிகமாக விமான சேவை தேவைப்படும். விமானத் தயாரிப்பு துறையில் முன்னோடியான பிரான்ஸுக்கு இந்தியாவில் அதிக வாய்ப்புகள் உள்ளன. இது தவிர, சூரிய மின்உற்பத்தித் திட்டத்திலும் இரு நாடுகளும் இணைந்து செயல்பட இருக்கின்றன.
இந்த மாநாட்டில் இந்தியாவுக்கான பிரான்ஸ் தூதர் அலெக்சாண்டர் சிக்லர் மற்றும் அந்நாட்டு விமானத் தயாரிப்பு நிறுவனங்களின் பிரதிநிதிகள் உள்பட பலர் பங்கேற்றனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com