உ.பி.: போட்டியின்றித் தேர்வாகும் 13 சட்டமேலவை உறுப்பினர்கள்?

உத்தரப் பிரதேச மாநில சட்ட மேலவை தேர்தலில் போட்டியிடும் 13 வேட்பாளர்களும் போட்டியின்றி தேர்வு செய்யப்பட வாய்ப்புள்ளதாகத் தெரிகிறது. தேர்தல் நடைபெறும் 13 இடங்களுக்கும் அவர்களைத் தவிர

உத்தரப் பிரதேச மாநில சட்ட மேலவை தேர்தலில் போட்டியிடும் 13 வேட்பாளர்களும் போட்டியின்றி தேர்வு செய்யப்பட வாய்ப்புள்ளதாகத் தெரிகிறது. தேர்தல் நடைபெறும் 13 இடங்களுக்கும் அவர்களைத் தவிர எவரும் வேட்புமனு தாக்கல் செய்யவில்லை என்பதால் தேர்தல் நடக்க வாய்ப்பில்லை எனத் தெரிகிறது.
அந்த மாநில சட்ட மேலவையில் மொத்தம் உள்ள 100 இடங்களில், 13 இடங்களுக்கான தேர்தல் வரும் 26-ஆம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்தது. அந்த 13-இல் பாஜக 10 இடங்களிலும், அதன் கூட்டணிக் கட்சியான அப்னா தளம், சமாஜவாதி கட்சி, பகுஜன் சமாஜவாதி கட்சி ஆகியவை தலா ஒரு இடங்களிலும் போட்டியிட வேட்பாளர்களை அறிவித்திருந்தன.
இந்நிலையில், திங்கள்கிழமையுடன் வேட்புமனு தாக்கல் அவகாசம் நிறைவடைந்த நிலையில், அந்த 13 பேர் தவிர வேறு எவரும் வேட்புமனு தாக்கல் செய்யவில்லை என்று தேர்தல் நடத்தும் அதிகாரி அசோக் குமார் செளபே கூறினார்.
வேட்புமனுக்கள் மீதான ஆய்வு செவ்வாய்க்கிழமை நடைபெறும் நிலையில், அவை செல்லுபடியாகக் கூடியதாக இருக்கும் பட்சத்தில் வேட்பாளர்கள் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டதாக அறிவிக்கப்படலாம் எனத் தெரிகிறது. எனினும், வேட்புமனுவை திரும்பப் பெற வரும் 19-ஆம் தேதி வரை அவகாசம் இருப்பதால், அதுவரையில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகாது எனத் தெரிகிறது.
இத்தேர்தலில் பாஜக சார்பில் மாநில அமைச்சர்கள் மகேந்திர சிங், மோசின் ராஸா ஆகியோருடன், சரோஜினி அகர்வால், புக்கல் நவாப், யஷ்வந்த் சிங், ஜெய்வீர் சிங், வித்யாசாகர் சோன்கர், விஜய் பகதூர் பாதக், அசோக் கட்டாரியா, அசோக் தவன் போட்டியிடுகின்றனர்.
இதில் கட்டாரியா, சோன்கர், பாதக் ஆகியோர் மாநில பாஜக செயலர்கள் ஆவர். வாராணசியைச் சேர்ந்த அசோக் தவன் முன்னாள் சட்டமேலவை உறுப்பினர். பாஜக கூட்டணி கட்சியான அப்னா தளம் சார்பில் அதன் தலைவர் ஆஷிஷ் சிங் படேல் போட்டியிடுகிறார். சமாஜவாதி கட்சி தனது மாநில தலைவர் நரேஷ் உத்தமையும், பகுஜன் சமாஜ் கட்சி, மாநிலங்களவை தேர்தலில் தோற்ற அம்பேத்கரையும் களமிறக்கியுள்ளது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com