பிகார் சட்ட மேலவைத் தேர்தல் நிதீஷ் குமார், சுஷில் வேட்பு மனு

பிகார் சட்ட மேலவைத் தேர்தலில் போட்டியிடுவதற்காக, முதல்வர் நிதீஷ் குமார், துணை முதல்வர் சுஷில் குமார் மோடி, சுகாதாரத் துறை அமைச்சர் மங்கள் பாண்டே ஆகியோர் திங்கள்கிழமை வேட்பு மனு தாக்கல்
பிகார் சட்ட மேலவைத் தேர்தலில் போட்டியிடுவதற்காக, பாட்னாவிலுள்ள பேரவைச் செயலகத்தில் திங்கள்கிழமை வேட்பு மனு தாக்கல் செய்த முதல்வர் நிதீஷ் குமார், துணை முதல்வர் சுஷில் குமார் மோடி.
பிகார் சட்ட மேலவைத் தேர்தலில் போட்டியிடுவதற்காக, பாட்னாவிலுள்ள பேரவைச் செயலகத்தில் திங்கள்கிழமை வேட்பு மனு தாக்கல் செய்த முதல்வர் நிதீஷ் குமார், துணை முதல்வர் சுஷில் குமார் மோடி.

பிகார் சட்ட மேலவைத் தேர்தலில் போட்டியிடுவதற்காக, முதல்வர் நிதீஷ் குமார், துணை முதல்வர் சுஷில் குமார் மோடி, சுகாதாரத் துறை அமைச்சர் மங்கள் பாண்டே ஆகியோர் திங்கள்கிழமை வேட்பு மனு தாக்கல் செய்தனர்.
பிகார் சட்ட மேலவையில் உறுப்பினர்களாக உள்ள ஐக்கிய ஜனதா தளம் தலைவரும் முதல்வருமான நிதீஷ் குமார், முன்னாள் முதல்வர் ராப்ரி தேவி உள்பட 11 பேரின் பதவிக் காலம் அடுத்த மாதம் நிறைவடைகிறது. இதையொட்டி, அந்த இடங்களுக்கு வரும் 26-ஆம் தேதி தேர்தல் நடைபெறும் என்று இந்திய தேர்தல் ஆணையம் அண்மையில் அறிவித்தது.
இத்தேர்தலில் போட்டியிடுவதற்காக ராஷ்ட்ரீய ஜனதா தளம் (ஆர்ஜேடி) சார்பில் ராப்ரி தேவி, மூத்த தலைவர்கள் ராமசந்திர புர்பே, குர்ஷித் மோசின், சந்தோஷ் மாஞ்சி (முன்னாள் முதல்வர் ஜிதன்ராம் மாஞ்சியின் மகன்) ஆகியோர் கடந்த 13-ஆம் தேதி வேட்பு மனு தாக்கல் செய்தனர்.
மனு தாக்கலுக்கு கடைசி நாளான திங்கள்கிழமையன்று ஆளும் ஐக்கிய ஜனதா தளம் சார்பில் முதல்வர் நிதீஷ் குமார், ராமேஸ்வர் மஹ்தோ, காலித் அன்வர் ஆகியோர் பேரவை செயலகத்தில் வேட்பு மனு தாக்கல் தாக்கல் செய்தனர். இதேபோல், பாஜக சார்பில் துணை முதல்வர் சுஷில் குமார் மோடி, சுகாதாரத் துறை அமைச்சர் மங்கள் பாண்டே, சஞ்சய் பாஸ்வான் ஆகியோரும், காங்கிரஸ் சார்பில் அக்கட்சியின் மூத்த தலைவர் பிரேம் சந்திர மிஸ்ராவும் தங்களது மனுக்களை தாக்கல் செய்தனர்.
மனுக்கள் மீதான பரிசீலனை செவ்வாய்க்கிழமை (ஏப்.17) நடைபெறவுள்ளது. மனுக்களை திரும்பப் பெற ஏப்.19 கடைசி நாளாகும். 11 இடங்களுக்கு 11 வேட்பாளர்களே களத்தில் இருப்பதால் அனைவரும் போட்டியின்றி தேர்வாகும் நிலை உள்ளது.
இதில் நிதீஷ் குமாரும், சுஷில் குமார் மோடியும் தொடர்ந்து 3-ஆவது முறையாக சட்ட மேலவை உறுப்பினராக தேர்வாகவிருக்கின்றனர்.
பிகார் சட்டப் பேரவையில் ஆர்ஜேடி கட்சிக்கு 81எம்எல்ஏக்களும், ஐக்கிய ஜனதா தளத்துக்கு 70, பாஜகவுக்கு 53, காங்கிரஸுக்கு 27 எம்எல்ஏக்களும் உள்ளனர். தற்போதைய தேர்தலில் வெற்றி பெற 21 எம்எல்ஏக்களின் ஆதரவு தேவை.
சட்ட மேலவையில் இருந்து அடுத்த மாதம் ஓய்வு பெறும் உறுப்பினர்களில் 5 பேர் ஐக்கிய ஜனதா தளம் கட்சியையும், 4 பேர் பாஜகவையும், ஒருவர் ஆர்ஜேடி கட்சியையும் சேர்ந்தவர்கள். இதில் ஐக்கிய ஜனதா தளம் 2 இடங்களையும், பாஜக ஓரிடத்தையும் இழக்கவிருக்கிறது. அதேவேளையில் ஆர்ஜேடி கட்சிக்கு கூடுதலாக 3 இடங்கள் கிடைக்கவுள்ளன. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com