மேற்கு வங்க உள்ளாட்சித் தேர்தல் நடைமுறைகளுக்கான தடை நீட்டிப்பு

மேற்கு வங்க உள்ளாட்சித் தேர்தல் நடைமுறைகளை மேற்கொள்வதற்கு விதிக்கப்பட்ட இடைக்கால தடையை மேலும் ஒரு நாள் நீட்டித்து அம்மாநில உயர் நீதிமன்றம் திங்கள்கிழமை உத்தரவு பிறப்பித்தது.

மேற்கு வங்க உள்ளாட்சித் தேர்தல் நடைமுறைகளை மேற்கொள்வதற்கு விதிக்கப்பட்ட இடைக்கால தடையை மேலும் ஒரு நாள் நீட்டித்து அம்மாநில உயர் நீதிமன்றம் திங்கள்கிழமை உத்தரவு பிறப்பித்தது.
மேற்கு வங்கத்தில் உள்ள உள்ளாட்சி அமைப்புகளுக்கு அடுத்த மாதம் முதல் வாரத்தில் 3 கட்டங்களாக தேர்தல் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. இதையொட்டி, வேட்பு மனு தாக்கலுக்கான கடைசி தேதி ஏப்.9ஆக முதலில் அறிவிக்கப்பட்டிருந்தது. பின்னர், அந்த காலக் கெடுவை ஏப்.10 வரை நீட்டிப்பதாக மாநில தேர்தல் ஆணையம் அறிவித்தது. ஆனால், அந்த அறிவிப்பை மாநில தேர்தல் ஆணையம் திடீரென திரும்பப் பெற்றுக் கொண்டது. இதையடுத்து, தேர்தல் நடைமுறைகளில் முறைகேடுகள் நடைபெற்றுள்ளதாக குற்றம்சாட்டி, கொல்கத்தா உயர் நீதிமன்றத்தில் பாஜக சார்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது.
அந்த மனுவை விசாரித்த நீதிபதி சுப்ரதா தலூக்தார், உள்ளாட்சித் தேர்தல் பணிகளை மேற்கொள்வதற்கு ஏப்.16-ஆம் தேதி வரை தடை விதித்து உத்தரவிட்டார். இந்த உத்தரவை எதிர்த்து, திரிணமூல் காங்கிரஸ் தலைமையிலான மாநில அரசும், மாநில தேர்தல் ஆணையமும் தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனு, உயர் நீதிமன்ற நீதிபதிகள் பி.சோமத்தர், ஏ.முகர்ஜி ஆகியோர் அடங்கிய அமர்வு முன் திங்கள்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது, 'தற்போதைய நிலையில், இந்த விவகாரத்தில் தலையிட விரும்பவில்லை' என்று தெரிவித்த நீதிபதிகள், வழக்கை மீண்டும் தனி நீதிபதியின் விசாரணைக்கே அனுப்பிவைத்தனர். 
இதனிடையே, மேற்கு வங்க உள்ளாட்சித் தேர்தல் நடைமுறைகளுக்கான தடையை செவ்வாய்க்கிழமை (ஏப்.17) வரை நீட்டித்து, நீதிபதி சுப்ரதா தலூக்தார் திங்கள்கிழமை உத்தரவிட்டார். மேலும், செவ்வாய்க்கிழமை பிற்பகலில் இந்த விவகாரத்தை மீண்டும் விசாரிப்பதாக அவர் தெரிவித்தார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com