கர்நாடக தேர்தலை தீர்மானிக்கப் போவது இந்து முஸ்லீம் பிரச்னைகள்தான்: பாஜக எம்.எல்.ஏவின் சர்ச்சைப்  பேச்சு! 

விரைவில் நடைபெற இருக்கும் கர்நாடக சட்டப்பேரவைத் தேர்தலின் முடிவைத் தீர்மானிக்கப் போவது இந்து முஸ்லீம் பிரச்னைகள்தான் என்று பாஜக எம்.எல்.ஏ ஒருவர், தேர்தல் பிரசாரத்தில் பேசியிருப்பது... 
கர்நாடக தேர்தலை தீர்மானிக்கப் போவது இந்து முஸ்லீம் பிரச்னைகள்தான்: பாஜக எம்.எல்.ஏவின் சர்ச்சைப்  பேச்சு! 

பெங்களூரு: விரைவில் நடைபெற இருக்கும் கர்நாடக சட்டப்பேரவைத் தேர்தலின் முடிவைத் தீர்மானிக்கப் போவது இந்து முஸ்லீம் பிரச்னைகள்தான் என்று பாஜக எம்.எல்.ஏ ஒருவர், தேர்தல் பிரசாரத்தில் பேசியிருப்பது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது

கர்நாடகா சட்டப்பேரவைக்கு வரும் மே 12-ம் தேதி தேர்தல் நடைபெற உள்ளது. தேர்தலுக்கு இன்னும் சில நாட்களே உள்ள நிலையில் பாஜக மற்றும் காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் இறுதிக் கட்ட தேர்தல் பிரச்சாரத்தில் தீவிரமாக இறங்கியுள்ளன.

இந்நிலையில் விரைவில் நடைபெற இருக்கும் கர்நாடக சட்டப்பேரவைத் தேர்தலின் முடிவைத் தீர்மானிக்கப் போவது இந்து முஸ்லீம் பிரச்னைகள்தான் என்று பாஜக எம்.எல்.ஏ ஒருவர், தேர்தல் பிரசாரத்தில் பேசியிருப்பது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது

வடக்கு கர்நாடகத்தில் அமைந்துள்ள பெலகாவி பகுதியின் பாஜக எம்எல்ஏவாக இருப்பவர்  சஞ்சய் பட்டீல். இவர் தேர்தல் பிரசாரத்தில் அடையாளம் தெரியாத ஒரு இடத்தில் பேசிய விடியோவானது தற்பொழுது சர்ச்சையை உண்டாக்கியுள்ளது. அதில் அவர் கூறியிருப்பதாவது: 

நான் சஞ்சய் பட்டீல். நான் ஒரு இந்து. இது இந்து தேசம். நாம் ராமர் கோயிலைக் கட்டியெழுப்ப வேண்டும். யாருக்கெல்லாம் பாபர் மசூதி, திப்பு ஜெயந்தி வேண்டுமோ அவர்கள் எல்லோரும் காங்கிரஸுக்கு வாக்களிக்கட்டும். யாருக்கெல்லாம் சிவாஜி மன்னரின் ஆட்சி, ராமர் கோயில் வேண்டுமோ அவர்கள் பாஜகவுக்கு வாக்களிக்க வேண்டும்.

நடைபெறவுள்ள கர்நாடகா சட்டப்பேரவை தேர்தல் வெற்றியை சாலை மற்றும் குடிநீர் பிரச்சினைகள் தீர்மானிக்கப் போவதில்லை. இந்துக்களுக்கும் முஸ்லிம்களுக்கும் இடையிலான பிரச்சினைகள் தான் முடிவு செய்யப் போகிறது.

அவரது இந்த பேச்சு சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com