உன்னாவ் வழக்கு: காவல் நீட்டிப்பு முடிந்தும் சிறையில் அடைக்கப்பட்டிருக்கும் பெண்

உன்னாவ் பலாத்கார சம்பவத்தில், பாதிக்கப்பட்ட பெண்ணை ஏமாற்றி சம்பவ இடத்துக்கு அழைத்துச் சென்றதாகக் கைது செய்யப்பட்ட பெண்ணின் காவல் முடிந்தும் அவர் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
உன்னாவ் வழக்கு: காவல் நீட்டிப்பு முடிந்தும் சிறையில் அடைக்கப்பட்டிருக்கும் பெண்


உன்னாவ்: உன்னாவ் பலாத்கார சம்பவத்தில், பாதிக்கப்பட்ட பெண்ணை ஏமாற்றி சம்பவ இடத்துக்கு அழைத்துச் சென்றதாகக் கைது செய்யப்பட்ட பெண்ணின் காவல் முடிந்தும் அவர் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

அப்பெண்ணை தொடர்ந்து சிறையில் அடைத்து வைக்க சிபிஐ ரிமாண்ட் கோராத நிலையில், உன்னாவ் வழக்கில் கைதான ஒரே பெண் ஷாஷி சிங் சிறையில் வைக்கப்பட்டுள்ளார்.

பாஜக எம்எல்ஏ குல்தீப் சிங் செங்காரின் உதவியாளர் என்று கருதப்படும் ஷாஷி சிங் ஏப்ரல் 16ம் தேதி 4 நாட்கள் காவல்துறை காவலில் வைக்கப்பட்டார். அந்த காவல் நேற்றுடன் முடிவடைந்த நிலையில், அவர் தொடர்ந்து சிறையில் வைக்கப்பட்டுள்ளார்.

சம்பவத்தின் பின்னணி: 
உத்தரப்பிரதேச மாநிலத்தில் பங்கார்மாவ் தொகுதி பாஜக எம்எல்ஏ குல்தீப் சிங் செங்கரின் இல்லத்துக்கு வேலைவாய்ப்பு கேட்டு கடந்த ஆண்டு சென்றபோது, அவர் தன்னை பாலியல் பலாத்காரம் செய்துவிட்டதாக உன்னாவ் பகுதியைச் சேர்ந்த 17 வயது இளம்பெண் ஒருவர் குற்றம்சாட்டினார். 

இதுகுறித்து காவல்துறையிலும், முதல்வர் யோகி ஆதித்யநாத்தின் அலுவலகத்திலும் புகார் அளித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்று கூறி, லக்ளெவில் உள்ள முதல்வரின் இல்லம் அருகே அண்மையில் அந்த பெண் தீக்குளிக்க முயன்றார். இதையடுத்து, இந்த விவகாரம் விஸ்வரூபம் எடுத்தது.

பின்னர், முதல்வரின் உத்தரவின்பேரில் எம்எல்ஏவுக்கு எதிராக காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்தனர். அந்த வழக்கு உடனடியாக சிபிஐ-யிடம் ஒப்படைக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து, குல்தீப் சிங் கைது செய்யப்பட்டார். 

லக்னௌவில் உள்ள சிபிஐ நீதிமன்றத்தில்  ஆஜர்படுத்தப்படுத்தப்பட்ட அவரை, 7 நாள் காவலில் விசாரிக்க சிபிஐ-க்கு அனுமதி வழங்கி நீதிமன்றம் உத்தரவிட்டது.

பெண் கைது: இதனிடையே, வேலைவாய்ப்பு வாங்கித் தருவதாக ஏமாற்றி, அந்த இளம்பெண்ணை எம்எல்ஏவின் இல்லத்துக்கு அழைத்துச் சென்றதாக ஷாஷி சிங் என்ற பெண்ணை சிபிஐ அதிகாரிகள் கைது செய்தனர். 

பாலியல் பலாத்கார வழக்கில் குல்தீப் சிங் செங்கர் பெயர் மட்டுமன்றி ஷாஷி சிங்கின் பெயரையும் சிபிஐ பதிவு செய்தது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com