இந்தப் பட்டியலில் பாரதிய ஜனதா கட்சி எம்.பி., எம்.எல்.ஏக்கள் முதலிடம்: ஆனால் பெருமைப்பட முடியுமா? 

சமுதாயத்தில் வெறுப்பை ஏற்படுத்தக்கூடிய வகையிலான கருத்துகளை வெளியிட்டு வரும் அரசியல்வாதிகள், பாராளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள் பட்டியலில் பாரதிய ஜனதா கட்சி முதலிடம் பெற்றுள்ளது.
இந்தப் பட்டியலில் பாரதிய ஜனதா கட்சி எம்.பி., எம்.எல்.ஏக்கள் முதலிடம்: ஆனால் பெருமைப்பட முடியுமா? 

புதுதில்லி: சமுதாயத்தில் வெறுப்பை ஏற்படுத்தக்கூடிய வகையிலான கருத்துகளை வெளியிட்டு வரும் அரசியல்வாதிகள், நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள் பட்டியலில் பாரதிய ஜனதா கட்சி முதலிடம் பெற்றுள்ளது.

ஜனநாயக சீர்த்திருத்தத்திற்கான சங்கம் என்னும் அமைப்பானது சமுதாயத்தில் வெறுப்பை ஏற்படுத்தக்கூடிய வகையிலான கருத்துகளை வெளியிட்டு வழக்குகளை எதிர்கொண்டு வரும் அரசியல்வாதிகள், நாடாளுமன்றபாராளுமன்ற மற்றும் சட்டமன்ற உறுப்பினர்கள் பற்றிய தகவல்களை சேகரித்துள்ளது.

இந்த ஆய்வில் நாடு முழுவதும் 15 எம்.பிக்கள் மற்றும் 43 எம்.எல்.ஏக்கள் என பதவியில் உள்ள மொத்தம் 85 பேர் இத்தகைய வழக்குக்களில் சிக்கி உள்ள தகவல் தெரியவந்துள்ளது. 

இவர்களில் பாஜக எம்.பிக்கள், எம்.எல்.ஏக்கள்  முதல் இடம் வகிப்பதாக புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன.  அந்த கட்சியை சேர்ந்த 10 எம்.பிக்கள் உள்பட 27 பேர் மீது இந்த வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

இதனை அடுத்த இடங்களில் அனைத்து இந்திய மஜ்லிஸ் கட்சி மற்றும் தெலுங்கானா ராஷ்டிர சமிதி கட்சிகள் தலா 6, தெலுங்கு தேசம், சிவசேனா தலா 3, காங்கிரஸ், திரிணாமுல் காங்கிரஸ், ஐக்கிய ஜனதாதளத்தைச் சோ்ந்த தலா 2 பேரும் பாட்டாளி மக்கள் கட்சி,  இந்த வழக்குகளில் சிக்கி உள்ளனா்.

அதேபோல தெலுங்கனாவில் வெறுப்புணர்வை தூண்டும் பேச்சுகள் மீதான வழக்குகளில் 13 எம்.எல்.ஏக்களும்,  குஜராத், மத்தியப் பிரதேசம், தமிழ்நாடு, ராஜஸ்தான் மற்றும் ஜார்கண்ட் மாநிலங்களிலிருந்து தலா ஒரு எம்.எல்.ஏ.க்கு எதிராகவும் வழக்குகள்  பதிவு செய்யப்பட்டுள்ளன.

இவ்வாறு ஒரு 'தவிர்க்க வேண்டிய புகழையும்' பாஜக பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.   .

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com