உள்துறை பொறுப்பில் இருந்து ஃபட்னவீஸ் விலக வேண்டும்: உத்தவ் தாக்கரே வலியுறுத்தல்

மகாராஷ்டிர மாநில பாஜக அரசு எதற்கும் உதவாத அரசாக உள்ளது; உள்துறை அமைச்சர் பொறுப்பில் இருந்து முதல்வர் தேவேந்திர ஃபட்னவீஸ் விலக வேண்டும் என்று சிவசேனைத் தலைவர் உத்தவ் தாக்கரே வலியுறுத்தியுள்ளார்.
உள்துறை பொறுப்பில் இருந்து ஃபட்னவீஸ் விலக வேண்டும்: உத்தவ் தாக்கரே வலியுறுத்தல்

மகாராஷ்டிர மாநில பாஜக அரசு எதற்கும் உதவாத அரசாக உள்ளது; உள்துறை அமைச்சர் பொறுப்பில் இருந்து முதல்வர் தேவேந்திர ஃபட்னவீஸ் விலக வேண்டும் என்று சிவசேனைத் தலைவர் உத்தவ் தாக்கரே வலியுறுத்தியுள்ளார்.
 மகாராஷ்டிரத்தில் கடந்த ஞாயிற்றுக்கிழமை உள்ளூர் சிவசேனைத் தலைவர் ஒருவர் மர்ம நபர்களால் சுட்டுக் கொல்லப்பட்டார். இதேபோல இம்மாதத் தொடக்கத்தில் அகமதுநகர் மாவட்டத்தில் உள்ளாட்சித் தேர்தல் முடிவு வெளியானபோது, உள்ளூர் சிவசேனை தலைவர்கள் இருவர் கொல்லப்பட்டனர்.
 இந்நிலையில், அகமது நகரில் செய்தியாளர்களிடம் உத்தவ் தாக்கரே புதன்கிழமை கூறியதாவது:
 மகாரஷ்டிர மாநில பாஜக அரசு எதற்கும் உதவாத அரசாக உள்ளது. மாநிலத்தில் சட்டம்-ஒழுங்கு முற்றிலுமாக சீர்குலைந்து வருகிறது. சமூகவிரோதிகள் துப்பாக்கிகளைப் பயன்படுத்துவது அதிகரித்துள்ளது. கடந்த சில நாள்களில் எங்கள் கட்சியைச் சேர்ந்த 3 பேர் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளனர். இந்த சம்பவங்களுக்கு பொறுப்பேற்று முதல்வர் ஃபட்னவீஸ் உள்துறை அமைச்சர் பொறுப்பில் இருந்து விலக வேண்டும். உள்துறைக்கு தனி அமைச்சர் இருந்தால் மட்டுமே அத்துறை சிறப்பாக செயல்பட முடியும்.
 தேர்தலில் வெற்றி பெற குற்றவாளிகளையும் தங்கள் கட்சியில் சேர்த்துக் கொள்ளும் கொள்கையை பாஜக கடைப்பிடிக்கிறது. இப்படி இருந்தால் மாநிலத்தில் எப்படி சட்டம்-ஒழுங்கை நிலைநாட்ட முடியும். தொடர்ந்து இதே நிலை நீடித்தால் எங்கள் கட்சித் தொண்டர்கள் சட்டத்தைக் கையில் எடுத்து சமூக விரோதிகளை தண்டிக்க வேண்டிய நிலை ஏற்படும் என்றார் அவர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com