நீதித்துறை பிரச்னைகளுக்கு தீர்வு காண அனைத்து நீதிபதிகள் கூட்டத்துக்கு ஏற்பாடு: உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதிக்கு 2 நீதிபதிகள் கடிதம்

நீதித்துறை சந்தித்து வரும் பிரச்னைகளுக்கு தீர்வு காண்பதற்கு, அனைத்து நீதிபதிகள் கூட்டத்துக்கு ஏற்பாடு செய்ய வேண்டும் என்று
நீதித்துறை பிரச்னைகளுக்கு தீர்வு காண அனைத்து நீதிபதிகள் கூட்டத்துக்கு ஏற்பாடு: உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதிக்கு 2 நீதிபதிகள் கடிதம்

நீதித்துறை சந்தித்து வரும் பிரச்னைகளுக்கு தீர்வு காண்பதற்கு, அனைத்து நீதிபதிகள் கூட்டத்துக்கு ஏற்பாடு செய்ய வேண்டும் என்று உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி தீபக் மிஸ்ராவுக்கு மூத்த நீதிபதிகள் 2 பேர் கடிதம் எழுதியுள்ளனர்.
 உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி தீபக் மிஸ்ராவுக்கு எதிராக மாநிலங்களவைத் தலைவர் வெங்கய்ய நாயுடுவிடம் காங்கிரஸ் உள்ளிட்ட 7 எதிர்க்கட்சிகள் பதவிநீக்க தீர்மான நோட்டீûஸ அளித்தன. அந்த நோட்டீûஸ வெங்கய்ய நாயுடு கடந்த 23ஆம் தேதி நிராகரித்தார்.
 இந்த நோட்டீûஸ அவர் நிராகரிப்பதற்கு முந்தைய நாளில், அதாவது கடந்த 22ஆம் தேதியன்று தீபக் மிஸ்ராவுக்கு உச்ச நீதிமன்றத்தைச் சேர்ந்த மூத்த நீதிபதிகள் ரஞ்சன் கோகோய், எம்.பி. லோகுர் ஆகியோர் கடிதம் ஒன்று எழுதியுள்ளனர். 2 வரிகளை மட்டுமே கொண்ட அந்தக் கடிதத்தில், "நீதித்துறையில் நிலவும் பிரச்னைகள் குறித்தும், உச்ச நீதிமன்றத்தின் எதிர்காலம் குறித்து விவாதிப்பதற்கு அனைத்து நீதிபதிகள் கூட்டத்தை தலைமை நீதிபதி கூட்ட வேண்டும்' என அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
 இந்நிலையில், தீபக் மிஸ்ராவுக்கு எதிராக பதவிநீக்க தீர்மான நோட்டீûஸ வெங்கய்ய நாயுடு நிராகரித்த சிறிது நேரத்துக்குப் பிறகு, உச்ச நீதிமன்ற நீதிபதிகள் அனைவரும் ஒன்றாக அமர்ந்து தேநீர் அருந்தினர். அப்போது அனைத்து நீதிபதிகள் கூட்டத்தை கூட்டுவது குறித்து தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா எதுவும் தெரிவிக்கவில்லை.
 முன்னதாக, இதே கோரிக்கையை மூத்த நீதிபதி ஜே.செலமேஸ்வர் கடந்த மார்ச் மாதம் 21ஆம் தேதியும், மற்றோர் நீதிபதி குரியன் ஜோசப் கடந்த 9ஆம் தேதியும் எழுப்பியிருந்தனர். அப்போது அவர்கள், உச்ச நீதிமன்ற பிரச்னைகளுக்கு தீர்வு காண்பதற்கு 7 நீதிபதிகள் கொண்ட அமர்வை தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா ஏற்படுத்த வேண்டும் என வலியுறுத்தியிருந்தனர்.
 நீதிபதி குரியன் ஜோசப் தனது கடிதத்தில், நீதிபதிகள் தேர்வுக் குழுவின் (கொலிஜீயம்) பரிந்துரை மத்திய அரசால் தாமதிக்கப்படுவதாகவும், இதனால் நீதித்துறைக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டிருப்பதாகவும் குறிப்பிட்டிருந்தார். நீதிபதிகள் நியமனம் தொடர்பான விவகாரத்தில் தர்க்க ரீதியில் முடிவு எட்டப்படுவதற்கு, மிக மூத்த நீதிபதிகள் 7 பேரைக் கொண்ட அமர்வை தலைமை நீதிபதி அமைக்க வேண்டும் எனவும் அவர் தெரிவித்திருந்தார்.
 உச்ச நீதிமன்றத்தில் பணிபுரியும் அனைத்து நீதிபதிகள் கூட்டத்தை உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதிதான் பொதுவாக கூட்டுவது வழக்கம். அதாவது, பொது மக்கள் முக்கியத்துவம் வாய்ந்த பிரச்னை குறித்து விவாதிக்க இந்த கூட்டத்தை அவர் கூட்டுவது நடைமுறை.
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com