கர்நாடக தேர்தல்: யோகி, அகிலேஷ் பிரசாரம்

கர்நாடக சட்டப்பேரவைக்கு வரும் மே மாதம் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், பாஜகவின் யோகி ஆதித்யநாத், சமாஜவாதியின் அகிலேஷ் யாதவ், பகுஜன் சமாஜின் மாயாவதி ஆகியோர்

கர்நாடக சட்டப்பேரவைக்கு வரும் மே மாதம் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், பாஜகவின் யோகி ஆதித்யநாத், சமாஜவாதியின் அகிலேஷ் யாதவ், பகுஜன் சமாஜின் மாயாவதி ஆகியோர் அந்த மாநிலத்தில் பிரசார சுற்றுப் பயணம் மேற்கொள்கின்றனர்.
 இதில் உத்தரப் பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் பிரசார திட்டம் குறித்து பாஜக செய்தித் தொடர்பாளர் ஷாலப் மானி திரிபாதி கூறுகையில், "மே 3-ஆம் தேதி கர்நாடகத்துக்கு வரும் முதல்வர் யோகி ஆதித்யநாத், மே 7 முதல் 10-ஆம் தேதி வரையில் பிரசார பேரணிகளில் பங்கேற்கிறார். மொத்தமாக சுமார் 35 பேரணி மற்றும் பொதுக் கூட்டங்களில் அவர் உரையாற்றுவார்' என்றார்.
 கர்நாடகத்தின் கடற்கரையோரப் பகுதிகளில் அதிகமாக இருக்கும் "நாத்' சமூகத்தினரின் வாக்குகளை குறிவைத்து, அந்த சமூகத்தைச் சேர்ந்த யோகி ஆதித்யநாத்தை பாஜக களமிறக்கியுள்ளது.
 இதனிடையே, சமாஜவாதி களமிறக்கும் 24-க்கும் அதிகமான வேட்பாளர்களுக்காக அகிலேஷ் யாதவ் பிரசாரம் மேற்கொள்ளும் திட்டம் குறித்து ஓரிரு நாள்களில் அறிவிக்கப்படும் என்று அக்கட்சியின் செய்தித் தொடர்பாளர் ராஜேந்திர செளதுரி கூறினார்.
 அகிலேஷ் யாதவ் காங்கிரஸýக்கு ஆதரவாகவும் பிரசாரம் மேற்கொள்வாரா என்று கேட்டதற்கு, தற்போதைய நிலையில் அவர் சமாஜவாதி வேட்பாளர்களுக்காக மட்டுமே பிரசாரம் மேற்கொள்வார் என்று தெரிவித்தார். கடந்த ஆண்டு உத்தரப் பிரதேச சட்டப்பேரவைத் தேர்தலில் காங்கிரஸ், சமாஜவாதி கட்சிகள் ஒருங்கிணைந்து போட்டியிட்டது குறிப்பிடத்தக்கது.
 இந்நிலையில், கர்நாடக பேரவைத் தேர்தலில் பகுஜன் சமாஜ் கட்சியானது, மதச்சார்பற்ற ஜனதா தளத்துடன் இணைந்து 20 தொகுதிகளில் போட்டியிடுகிறது.
 அக்கட்சித் தலைவர் மாயாவதி புதன்கிழமை முதல் கர்நாடகத்தில் தனது பிரசாரத்தை தொடங்கியுள்ளார். தற்போது மைசூரில் பிரசாரத்தை முடித்துள்ள அவர், வியாழக்கிழமை சித்ரதுர்காவிலும், மே 5, 6 தேதிகளில் பெலகாவி மற்றும் பிதாரிலும் பிரசாரம் மேற்கொள்ள உள்ளார்.
 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com