டிரம்ப் நிர்வாகத்தின் விசா கெடுபிடி அதிருப்தி அளிக்கிறது

அமெரிக்காவில் ஹெச் 1 பி விசா பெற்று பணியாற்றிவரும் வெளிநாட்டவர்களின் கணவர் அல்லது மனைவி அங்கு பணியாற்றுவதற்கு
டிரம்ப் நிர்வாகத்தின் விசா கெடுபிடி அதிருப்தி அளிக்கிறது

அமெரிக்காவில் ஹெச் 1 பி விசா பெற்று பணியாற்றிவரும் வெளிநாட்டவர்களின் கணவர் அல்லது மனைவி அங்கு பணியாற்றுவதற்கு தடை விதிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் நிர்வாகம் எடுத்துள்ள முடிவு அதிருப்தி அளிப்பதாக மத்திய வர்த்தம் மற்றும் தொழில்துறை அமைச்சர் சுரேஷ் பிரபு தெரிவித்தார்.
 தில்லியில் அமெரிக்க வர்த்தக மையம் சார்பில் வியாழக்கிழமை ஏற்பாடு செய்யப்பட்டிருந்த நிகழ்ச்சியில் பங்கேற்று அவர் பேசியதாவது: அமெரிக்காவில் ஹெச் 1 பி விசாவில் பணியாற்றுபவர்களின் கணவர், மனைவி ஹெச் 4 விசா பெறுவதற்கு தடை விதிக்க அமெரிக்கா எடுத்துள்ள முடிவு அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. இதுதொடர்பாக உரிய நடவடிக்கைகளை அந்நாட்டு அரசு மேற்கொள்ளும் என்று நம்புகிறோம்.
 இதுதொடர்பாக இந்தியாவின் கவலைகளை அமெரிக்காவிடம் ஏற்கெனவே எடுத்துரைத்துவிட்டோம். அமெரிக்காவின் பொருளாதார வளர்ச்சிக்கு இந்திய நிறுவனங்களும், அந்நாட்டில் பணிபுரியும் இந்தியர்களும் ஆற்றி வரும் பங்கினை அந்நாட்டு அரசிடம் விளக்கியிருக்கிறோம்.
 இந்தியாவின் கவலையை அமெரிக்கா புரிந்துகொள்ளும் என்று நம்புகிறேன். வர்த்தக விவகாரங்களிலும் சில கவலைகளை அமெரிக்காவிடம் பகிர்ந்திருக்கிறோம். அந்நிய நேரடி முதலீட்டின் மூலம் இந்தியாவும் பொருளாதார ரீதியில் முன்னேறிவரும் நாடாகத் திகழ்கிறது. சில அலுமினியம் மற்றும் எஃகு பொருள் வகைகளுக்கு மட்டும் அமெரிக்கா சுங்க வரியை விதித்துள்ளது.
 150 கோடி அமெரிக்க டாலர்கள் மதிப்புக்கு இந்தப் பொருள்களை ஆண்டுதோறும் இந்தியா ஏற்றுமதி செய்து வருகிறது. எனவே, அதன் மீதான சுங்க வரிக்கு விலக்கு அளிக்க வேண்டும் என்று சுரேஷ் பிரபு தெரிவித்தார்.
 கடந்த 2016-17-ஆம் நிதியாண்டில், இந்தியா-அமெரிக்கா இடையே சுமார் ரூ.4.3 லட்சம் கோடிக்கு வர்த்தகம் நடைபெற்றுள்ளது. கடந்த நிதியாண்டில் சுமார் 4.1 லட்சம் கோடிக்கு வர்த்தகம் நடைபெற்றுள்ளது.
 சுகாதாரப் பிரச்னைகளுக்குத் தீர்வு: இதனிடையே, நாடு முழுவதும் சுகாதாரம் தொடர்பான பிரச்னைகளுக்கு "தூய்மை இந்தியா' திட்டம் தீர்வாக அமையும் என்று அமைச்சர் சுரேஷ் பிரபு தெரிவித்தார்.
 இதுகுறித்து அவர் மேலும் கூறுகையில், "தூய்மை இந்தியா திட்டத்தின் மூலம் நாட்டில் மிகப் பெரிய மாற்றத்தைக் கொண்டு வர முடியும். இந்தத் திட்டத்தால் சுகாதாரப் பிரச்னைகளுக்குத் தீர்வு காண முடியும். உணவுப் பாதுகாப்புக்கு மண் பாதுகாப்பு அவசியமானதாகும்' என்றார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com