சீன அதிபரை சந்தித்த பிரதமர் நரேந்திர மோடி நாடு திரும்பினார்

சீன அதிபர் ஷி ஜின்பிங்கைச் சந்தித்த இந்திய பிரதமர் நரேந்திர மோடி, சனிக்கிழமை நாடு திரும்பினார். அவரை சுஷ்மா ஸ்வராஜ் வரவேற்றார்.
சீன அதிபரை சந்தித்த பிரதமர் நரேந்திர மோடி நாடு திரும்பினார்

இந்திய பிரதமர் நரேந்திர மோடி, சீனாவின் வுஹானில் நடைபெற்ற 2 நாள் உச்சி மாநாட்டில் பங்கேற்க சீனா சென்றார். உஹான் நகரில் பிரதமர் மோடிக்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. இந்த பெரும் மகிழ்ச்சி அடைவதாக இரு நாட்டுத் தலைவர்களும் கூறினார். 

மேலும் இந்த சந்திப்பின் போது இந்தியாவும், சீனாவும் இணைந்து செயல்பட அரிய வாய்ப்பு ஏற்பட்டுள்ளதாக சீன அதிபர் ஷி ஜின்பிங்கிடம் பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். இதன் மூலம் இரு நாட்டு மக்களுக்கு மட்டுமின்றி உலகுக்கே நன்மை கிடைக்கும் என்றும் அவர் தெரிவித்தார்.

இதைத் தொடர்ந்து, ஷி ஜின்பிங் மோடியிடம் கூறியதாவது:

இந்தியாவும், சீனாவும் பொருளாதார ரீதியாக மிகச்சிறந்த ஒத்துழைப்பைக் கொண்டுள்ளன. இரு நாடுகளிடையே சமீபகாலத்தில் நல்லுறவு அதிகரித்து வருகிறது. கடந்த 5 ஆண்டுகளில் நமது நாடுகள் மிகப்பெரிய சாதனைகளைப் படைத்துள்ளன. நாம் பல்வேறு சூழ்நிலையில் சந்தித்துப் பேசி ஒத்துழைப்பை அதிகரித்து வருகிறோம்.

இரு நாடுகளும் இணைந்து செயல்பட்டால் வளர்ச்சியின் உச்சத்தைத் தொட முடியும். ஆசிய பிராந்தியத்திலும், சர்வதேச அளவிலும் சீனா மற்றும் இந்தியாவின் செல்வாக்கு வேகமாக அதிகரித்து வருகிறது.  நம்மிரு நாடுகளிடையே சிறப்பான தகவல் பரிமாற்றம் இருக்க வேண்டும் என்று நான் விரும்புகிறேன். இதன் மூலம் இரு நாடுகளுக்கு இடையே சிறப்பான புரிந்துணர்வை ஏற்படுத்த முடியும். இந்திய-சீன உறவு அடுத்த கட்டத்தை எட்டும் என்றார்.

இந்நிலையில், சீன பயணத்தை முடித்துக்கொண்ட பிரதமர் நரேந்திர மோடி, சனிக்கிழமை நாடு திரும்பினார். அப்போது அவருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ், தில்லி விமான நிலையத்துக்கு நேரில் சென்று வரவேற்றார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com