உள்நாட்டுப் போரை மம்தா தூண்டாமல் இருக்கட்டும்: என்ஆர்சி விவகாரத்தில் காங்கிரஸ் பதிலடி

அஸ்ஸாம் அமைதியான மாநிலமாக இருப்பதால் அங்கு தேவையில்லாமல் உள்நாட்டுப் போரை மம்தா பானர்ஜி தூண்டி விடாமல் இருக்க வேண்டும் என்று என்ஆர்சி விவகாரத்தில் அஸ்ஸாம் காங்கிரஸ் தலைவர் பதிலளித்துள்ளார்.
உள்நாட்டுப் போரை மம்தா தூண்டாமல் இருக்கட்டும்: என்ஆர்சி விவகாரத்தில் காங்கிரஸ் பதிலடி

அஸ்ஸாம் அமைதியான மாநிலமாக இருப்பதால் அங்கு தேவையில்லாமல் உள்நாட்டுப் போரை மம்தா பானர்ஜி தூண்டி விடாமல் இருக்க வேண்டும் என்று என்ஆர்சி விவகாரத்தில் அஸ்ஸாம் காங்கிரஸ் தலைவர் பதிலளித்துள்ளார்.

அஸ்ஸாமில் வசிக்கும் உண்மையான இந்திய குடிமக்கள் எவர்? என்பதை அறிவதற்கான தேசிய குடிமக்கள் பதிவேட்டுக்கான கணக்கெடுப்பு நடத்தப்பட்டு, அதுதொடர்பான வரைவு பட்டியல் திங்கள்கிழமை வெளியிடப்பட்டது. அதில், 40 லட்சம் பேரின் பெயர்கள் சேர்க்கப்படவில்லை. இது சர்ச்சைகளுக்கு வித்திட்டது.
 கடந்த 1951-ஆம் ஆண்டுக்கு பிறகு தற்போதுதான் இந்த கணக்கெடுப்பு மீண்டும் நடத்தப்பட்டுள்ளது. அவ்வகையில் அஸ்ஸாம் மாநிலத்தில் உள்ள 3.29 கோடி மக்களில் 2.89 பேர் தான் அம்மாநிலத்தில் வசிக்கும் அதிகாரப்பூர்வ மக்கள் தொகையாகும். மேலும் அங்கு வங்கதேசத்தைச் சேர்ந்தவர்கள் சட்டவிரோதமாக குடியேறிள்ளதாக கூறப்படுகிறது.

இந்த விவகாரத்தில் மத்திய பாஜக அரசு தேவையற்ற உள்நாட்டுப் போரை உண்டாக்கும் சூழலை ஏற்படுத்திவிட்டதாக திரிணாமுல் காங்கிரஸ் தலைவரும், மேற்குவங்க முதல்வருமான மம்தா பானர்ஜி தெரிவித்தார். மம்தாவின் இந்த கருத்துக்கு பாஜக கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.

இந்நிலையில், அஸ்ஸாம் மாநில காங்கிரஸ் கட்சியும் மம்தா பானர்ஜிக்கு கண்டனம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து அம்மாநில காங்கிரஸ் தலைவர் ரிபுண் போரா கூறியதாவதுச

ஒரு மாநிலத்தின் சட்ட ஒழுங்கை கட்டிக் காக்க வேண்டியது அம்மாநில முதல்வரின் கடமை. மம்தா பானர்ஜி ஒரு மாநில முதல்வராக இருந்துகொண்டு இதுபோன்ற தேவையற்ற முறையில் பேச வேண்டாம். அஸ்ஸாம் மாநிலம் மிகவும் அமைதியாக உள்ளது. எனவே மம்தா பானர்ஜி தேவையில்லாமல் உள்நாட்டுப் போரை தூண்டி விடாமல் இருக்கட்டும். அவரின் இந்த கருத்துக்கு கடும் கண்டனத்தை தெரிவிக்கிறேன் என்றார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com