ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு உடல் உறுப்புகளை தானம் செய்தார்

ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு தனது உடல் உறுப்புகளை தானம் செய்வதாக திங்கள்கிழமை அறிவித்தார்.
ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு உடல் உறுப்புகளை தானம் செய்தார்

உடல் உறுப்பு தானம் விழிப்புணர்வு வாரம் திங்கள்கிழமை தொடங்கி கடைபிடிக்கப்படுகிறது. இதையடுத்து உடல் உறுப்பு தானம் தொடர்பான விழிப்புணர்வு குறித்து ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு அறிக்கை வெளியிட்டார்.

அதில், விபத்தில் அகால மரணம் அடைபவர்களின் உடல் உறுப்புகள் தானம் வழங்குவது தொடர்பாக அனைவரும் முன்வர வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார். மேலும், உடல் உறுப்பு தானம் தொடர்பாக விரைவில் பாடத்திட்டம் ஏற்படுத்த உள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

அதுமட்டுமல்லாமல் ஓட்டுநர் உரிமம் பெற கட்டாய உடல் உறுப்பு தானம் வழங்கும் திட்டம் ஏற்படுத்த திட்டமிட்டுள்ளதாகவும் கூறினார். மேலும் இந்த விழிப்புணர்வு வாரத்தை அடுத்து அதிகளவில் அனைவரும் முன்வந்து தங்கள் உடல் உறுப்புகளை தானம் செய்ய வேண்டும் என்று கோரிக்கை விடுத்தார்.

இதையடுத்து அம்மாநில அரசின் ஜீவாந்தன் என்ற உடல் உறுப்பு தானம் விழிப்புணர்வு அமைப்பில் சந்திரபாபு நாயுடு முன்னிலையில், தங்கள் உடல் உறுப்புகளை தானம் செய்ய சுமார் 1 லட்சத்து 20 ஆயிரம் பேர் முன்வந்தனர். இது தில்லியைச் சேர்ந்த இந்தியா சாதனைப் புத்தகத்தில் இடம்பெற்ற மிகப் பெரிய நிகழ்வாக அமைந்ததாக அதன் உறுப்பினர் ராகேஷ் வர்மா தெரிவித்தார். 

இந்நிலையில், ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு தனது உடல் உறுப்புகளை தானம் செய்வதாக திங்கள்கிழமை அறிவித்தார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com