ரயில்வே தேர்வு: 1.19 லட்சம் பேர் எழுதினர்

ரயில்வே துறையில் காலியாக உள்ள 60 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பணியிடங்களுக்கு வியாழக்கிழமை நடந்த முதல் கட்ட தேர்வில் 1.19 லட்சம் பேர் பங்கேற்றனர்.


ரயில்வே துறையில் காலியாக உள்ள 60 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பணியிடங்களுக்கு வியாழக்கிழமை நடந்த முதல் கட்ட தேர்வில் 1.19 லட்சம் பேர் பங்கேற்றனர்.
இந்தியாவின் மிகப்பெரிய பொதுத்துறை போக்குவரத்து நிறுவனமான ரயில்வே துறையில், உதவி லோகோ பைலட் மற்றும் டெக்னீஷியன் பிரிவில் 66, 502 காலி பணியிடங்களுக்கான அறிவிப்பை ரயில்வே தேர்வு வாரியம்(ஆர்ஆர்பி) வெளியிட்டிருந்தது. இந்த காலிப் பணியிடங்களுக்கு 48 லட்சம் பேர் தேர்வு எழுத உள்ளனர். 
இணைய வழியில், மிகப்பெரிய அளவில் நடத்தப்படும் இந்த தேர்வு, வியாழக்கிழமை(ஆக.9) தொடங்கி ஆகஸ்ட் 31 வரை பல கட்டங்களாக நடைபெற உள்ளது. இந்நிûயில், முதல் கட்டத் தேர்வு, 160 நகரங்களில் அமைக்கப்பட்ட 416 மையங்களில் வியாழக்கிழமை நடைபெற்றது. இந்த தேர்வில் பங்கேற்க விண்ணப்பித்த 1,61, 332 பேருக்கு தேர்வுக்கூட அனுமதி சீட்டை ரயில்வே அனுப்பியிருந்தது. அவர்களில் 74 சதவீதம் பேர், அதாவது 1,19,110 பேர் தேர்வு எழுதினர்.
ரயில்வே வாரியத்தால், கடந்த 2015-ம் ஆண்டிலிருந்து நடத்தப்பட்டு வரும் தேர்வுகளில் பங்கேற்றவர்களின் எண்ணிக்கையை ஒப்பிடும்போது இம்முறையே அதிகமாகும். அடுத்த கட்ட தேர்வு, வெள்ளிக்கிழமை (ஆக.10) நடைபெற உள்ளது. அதையடுத்து ஆகஸ்ட் 13, 14, 17, 20, 21, 29, 30, 31 ஆகிய தேதிகளில் பல கட்டங்களாக நடைபெறவுள்ளது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com