படகு மீது சரக்கு கப்பல் மோதிய விபத்து: மேலும் ஓர் மீனவர் சடலம் கண்டெடுப்பு

கேரள மாநிலம், கொச்சி அருகே கடலில் மீன்பிடி படகு மீது சரக்கு கப்பல் மோதிய விபத்தில் காணாமல் போன 9 மீனவர்களில், ஒருவரின் சடலம் சனிக்கிழமை கண்டெடுக்கப்பட்டது.

கேரள மாநிலம், கொச்சி அருகே கடலில் மீன்பிடி படகு மீது சரக்கு கப்பல் மோதிய விபத்தில் காணாமல் போன 9 மீனவர்களில், ஒருவரின் சடலம் சனிக்கிழமை கண்டெடுக்கப்பட்டது.
கொச்சியில் உள்ள முனம்பம் துறைமுகத்தில் இருந்து 24 நாட்டிங்காம் மைல் தொலைவில் 14 மீனவர்கள் கடந்த செவ்வாய்க்கிழமை மீன்பிடித்துக் கொண்டிருந்தனர். அப்போது அவர்களின் படகு மீது சரக்கு கப்பல் மோதியது. இந்த விபத்தில் மீனவர்கள் 3 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். அவர்கள் அனைவரும் தமிழகத்தைச் சேர்ந்தவர்கள் ஆவர். மேலும் 2 பேர் காயத்துடன் மீட்கப்பட்டு, மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டுள்ளனர். 
படகில் இருந்த 9 மீனவர்களை காணவில்லை. இதைத் தொடர்ந்து, கடலில் அவர்களை தேடும் பணி நடைபெற்றது. இந்நிலையில், படகு மீது சரக்கு கப்பல் மோதி விபத்து நேரிட்ட இடத்தில் மீனவர் ஒருவரின் சடலம் சனிக்கிழமை கண்டெடுக்கப்பட்டது. மீன்பிடி வலையில் சுற்றிய நிலையில் அவரது சடலம் மிதந்தது. இதைத் தொடர்ந்து, அவரது சடலம் மீட்கப்பட்டு, முனம்பம் துறைமுகத்துக்கு எடுத்து வரப்பட்டது. இவரையும் சேர்த்து, விபத்தில் பலியான மீனவர்களின் எண்ணிக்கை 4ஆக உயர்ந்துள்ளது.
மேலும் 8 மீனவர்களை காணவில்லை. அவர்களை தேடும் பணி தொடர்ந்து நடைபெறுகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com