இந்தியா இந்தியர்களுக்கே சொந்தம்: குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த்

இந்தியா சுதந்திர தினத்தை முன்னிட்டு குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த், செவ்வாய்கிழமை சிறப்புரையாற்றினார். 
இந்தியா இந்தியர்களுக்கே சொந்தம்: குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த்

இந்தியா சுதந்திர தினத்தை முன்னிட்டு குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த், செவ்வாய்கிழமை சிறப்புரையாற்றினார். அதில் அவர் பேசியதாவது:

ஆகஸ்டு 15-ஆம் தேதி ஒவ்வொரு இந்தியருக்கும் புனிதமான நாள். நம்முடைய மூவர்ணக்கொடி தான் நமது நாட்டின் அடையாளம். நம்முடைய முன்னோர்கள் மற்றும் சுதந்திரப் போராட்ட தியாகிகளால் தான் இந்தியாவின் சுதந்திரம் சாத்தியமானது. ஏழைகள் வறுமையில் இருந்து விடுபட நடவடிக்கை எடுக்க வேண்டியது அவசியம். 

நமது சமூகத்தில் பெண்களின் சிறப்பான பங்களிப்பும் உள்ளது. அவர்களுக்கு தங்களின் வாழ்க்கைப் பாதையை தேர்ந்தெடுக்கும் உரிமை உள்ளது. கல்வியோ, பணியோ பெண்கள் தங்கள் பாதையை தேர்வு செய்ய முழு சுதந்திரம் அளிக்க வேண்டும். அதில், வீட்டின் வளர்ச்சியிலோ, அலுவலகத்தின் வளர்ச்சியிலோ அல்லது கல்வியின் வளர்ச்சியிலோ அவர்களின் திறமையை வெளிப்படுத்தும் உரிமை அவர்களுடையது. பெண்கள் முன்னேற்றத்திற்கான வாய்ப்புகள் உருவாக்கப்பட வேண்டும்.

வரிசையில் சரியாகச் செல்வதும், வரிசையில் தங்களுக்கு முன்பு இருப்பவரின் உரிமைகளை மதிக்கத் தெரிவதும் தான் நமது சுதந்திரப் போராட்டத் தியாகிகளின் லட்சியங்களுக்குச் செய்யும் மரியாதையாக இருக்கும். எதிலும் வரிசை காத்து நமது உரிமைகளைப் பெறுவது என்பது ஒரு சாதாரணப் பணிதான். எனவே அதை நமது வாழ்வின் ஒரு பகுதியாக மாற்றிக்கொள்வோம். 

அதுபோன்று நமது ராணுவ வீரர்களுக்கு உரிய ஆயுதங்களை வழங்கி, ராணுவ வீரர்களின் நலனுக்கு தேவையான வசதிகளை செய்து கொடுத்து, இந்தியாவிலேயே நமது ராணுவத்துக்கு தேவையான அனைத்தையும் செய்துகொள்வதும் கூட நமது சுதந்திரப் போராட்ட தியாகிகள் கண்ட கனவை மெய்ப்பிக்கும் விதமாக அமையும். பாதுகாப்பு படை எப்போதும் தயார் நிலையில் உள்ளதால் நாட்டின் பாதுகாப்பு உறுதிபடுத்தப்பட்டுள்ளது. 

இந்தியா இந்தியர்களுக்கே சொந்தம். நாம் அனைவரும் ஒன்றுபட்டு அனைத்து குடிமகன்களுக்கும் உதவ முன்வர வேண்டும். நமது இயற்கையையும், பாரம்பரியத்தை பாதுகாக்க வேண்டும். நம்முடைய பொக்கிஷங்களை அடுத்த தலைமுறைக்காக பாதுகாத்திட வேண்டும். விவசாயி, ராணுவ வீரர்களுக்கு நாம் உதவும் போது நமது சுதந்திரம் வலுப்பெறும்  என்றார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com