அந்நியச் செலாவணி கையிருப்பு போதுமான அளவு உள்ளது: மத்திய அமைச்சர் அருண் ஜேட்லி

நமது நாட்டில் அந்நியச் செலாவணி கையிருப்பு போதுமான அளவுக்கு உள்ளது என்று மத்திய அமைச்சர் அருண் ஜேட்லி தெரிவித்துள்ளார்.
அந்நியச் செலாவணி கையிருப்பு போதுமான அளவு உள்ளது: மத்திய அமைச்சர் அருண் ஜேட்லி


நமது நாட்டில் அந்நியச் செலாவணி கையிருப்பு போதுமான அளவுக்கு உள்ளது என்று மத்திய அமைச்சர் அருண் ஜேட்லி தெரிவித்துள்ளார்.
முன்னதாக, செவ்வாய்க்கிழமை அமெரிக்க டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு 70.1 என்ற அளவுக்கு குறைந்தது. இது முன்னெப்போதும் இல்லாத சரிவாகும். இந்த சூழ்நிலையில் அருண் ஜேட்லி இவ்வாறு கூறியிருப்பது முக்கியத்துவம் பெற்றுள்ளது.
இந்திய ரூபாய் மதிப்பு வீழ்ச்சி அடைந்ததற்கு துருக்கியில் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடி முக்கியக் காரணம் என்று பொருளாதார நிபுணர்கள் கூறியுள்ளனர்.
இந்நிலையில், இது தொடர்பாக சுட்டுரையில் ஜேட்லி வெளியிட்டுள்ள தொடர் பதிவுகளில், இந்தியாவின் அடிப்படைப் பொருளாதாரக் கட்டமைப்பு மிகவும் வலுவாக உள்ளது. அதே நேரத்தில் நம்மிடம் அந்நியச் செலாவணி கையிருப்பும் போதுமான அளவுக்கு உள்ளது. எனவே, அந்நியச் செலாவணி சந்தையில் 
எத்தகைய ஏற்ற இறக்கங்கள் வந்தாலும் நம்மால் அதனை சமாளிக்க முடியும்.
சர்வதேச பொருளாதார பிரச்னைகள் காரணமாக அந்நியச் செலாவணி வர்த்தகத்தில் நிலையற்றதன்மை ஏற்பட்டு வருகிறது. இதனை மத்திய அரசு மிகவும் உன்னிப்பாக கவனித்து வருகிறது. சூழ்நிலைகளுக்கு ஏற்ப உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டு நமது நாட்டின் பொருளாதார நலன்கள் காக்கப்படும்' என்று கூறியுள்ளார். கடந்த 3-ஆம் தேதி இந்திய ரிசர்வ் வங்கி வெளியிட்ட அறிவிக்கையின்படி நமது நாட்டில் 402.70 பில்லியன் அமெரிக்க டாலர் கையிருப்பு உள்ளது. அதற்கு முந்தைய வாரத்தைவிட விட இது 1.49 பில்லியன் டாலர் குறைவாகும். நடப்பு நிதியாண்டில் அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு இதுவரை 6.7 சதவீதம் குறைந்துள்ளது.
இந்திய ரூபாயின் மதிப்பு குறைவது நமது நாட்டின் பொருளாதாரத்தில் பாதகமாக விளைவுகளை ஏற்படுத்தும். அந்நியச் செலாவணி சந்தையில் சில கட்டுப்பாடுகளை விதித்து டாலர் கையிருப்பை அதிகரிக்க வேண்டும் என்பது பொருளாதார வல்லுநர்களின் கருத்தாக உள்ளது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com