திருமலை திருப்பதி ஏழுமலையான் கோயிலில் 12 ஆண்டுகளுக்குப் பிறகு மகா கும்பாபிஷேகம்

திருமலை திருப்பதி ஏழுமலையான் கோயிலில் 12 ஆண்டுகளுக்குப் பிறகு மகா கும்பாபிஷேகம் வெகு விமரிசையாக நடைபெற்றது.
திருமலை திருப்பதி ஏழுமலையான் கோயிலில் 12 ஆண்டுகளுக்குப் பிறகு மகா கும்பாபிஷேகம்


திருப்பதி: திருமலை திருப்பதி ஏழுமலையான் கோயிலில் 12 ஆண்டுகளுக்குப் பிறகு மகா கும்பாபிஷேகம் வெகு விமரிசையாக நடைபெற்றது.

வேத விற்பன்னர்கள் வேதம் முழங்க, கோயில் கோபுர கலசங்களுக்கு குடமுழுக்கு நடத்தப்பட்டு, கும்பாபிஷேக நீர் பக்தர்களள் மீது தெளிக்கப்பட்டது.

கும்பாபிஷேகத்தை முன்னிட்டு லட்சக்கணக்கான பக்தர்கள் திருப்பதி ஏழுமலையான் கோயிலில் குவிந்துள்ளனர். கும்பாபிஷேக நீர் கலசங்களில் ஊற்றும் போது கோவிந்தா கோவிந்தா என்ற பக்தர்களின் கோஷம் விண்ணை முட்டியது. பக்தர்கள் அதிகளவில் குவிந்திருப்பதால் தீவிர பாதுகாப்புப் போடப்பட்டுள்ளது.

திருமலை திருப்பதியில் 12 ஆண்டுகளுக்கு ஒரு முறை நடைபெறும் மகா கும்பாபிஷேகத்தை முன்னிட்டு, கோயில் முழுவதும் மலர்களால் அலங்கரிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் திருமலை திருப்பதி மகா கும்பாபிஷேகத்துக்காக பல டன் மலர்கள் அனுப்பி வைக்கப்பட்டன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com