வாஜ்பாய் மறைவு: தமிழக தலைவர்கள் இரங்கல்

முன்னாள் பிரதமர் வாஜ்பாயின் மறைவுக்கு முதல்வர் பழனிசாமி, ஸ்டாலின், விஜயகாந்த், உள்ளிட்ட தலைவர்கள் இரங்கலை தெரிவித்துள்ளனர்.
வாஜ்பாய் மறைவு: தமிழக தலைவர்கள் இரங்கல்

முன்னாள் பிரதமர் வாஜ்பாயின் மறைவுக்கு முதல்வர் பழனிசாமி, ஸ்டாலின், விஜயகாந்த், உள்ளிட்ட தலைவர்கள் இரங்கலை தெரிவித்துள்ளனர். 

முன்னாள் பிரதமர் வாஜ்பாய் வியாழக்கிழமை மாலை 5.05 மணிக்கு எய்ம்ஸ் மருத்துவமனையில் காலமானார். அவரது மறைவையொட்டி தமிழக முதல்வர் பழனிசாமி, திமுக செயல் தலைவர் ஸ்டாலின், தேமுதிக தலைவர் விஜயகாந்த், பாஜக தேசிய செயலாளர் ஹெச்.ராஜா உள்ளிட்ட தலைவர்கள் தங்களது இரங்கலை தெரிவித்துள்ளார்கள். 

முதல்வர் பழனிசாமி:

வாஜ்பாயின் மறைவு இந்தியாவிற்கே ஒரு பேரிழப்பாகும். அன்னாரை இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கும், பாரதிய ஜனதா கட்சியினருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக்கொள்வதுடன், அவரது ஆன்மா இறைவன் திருவடி நிழலில் இளைப்பாற எல்லாம் வல்ல இறைவனை பிரார்த்திக்கிறேன். 

திமுக செயல் தலைவர் ஸ்டாலின்:

ஒரு தலைசிறந்த தலைவரையும், அரசியல்வாதியையும் இந்தியா இழந்துள்ளது. லட்சக்கணக்கான இந்தியர்களுடன் முன்னாள் பிரதமருக்கு எனது அஞ்சலியை செலுத்துகிறேன். 

முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம்:

முன்னாள் பிரதமர் வாஜ்பாய் அவர்களின் மறைவில் ஒரு கருணை உள்ளம் கொண்ட கண்ணியமான அரசியல் தலைவரை இந்தியா இழந்துவிட்டது. 

தேமுதிக தலைவர் விஜயகாந்த்:

வாஜ்பாயை, பிரிந்துவாடும் அவரது குடும்பத்திற்கும்,பாஜக கட்சியினருக்கும், நண்பர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக்கொள்கின்றேன். அவருடைய ஆன்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறேன்.  

பாஜக தேசிய செயலாளர் ஹெச்.ராஜா:

பாரத நாட்டை அணுஆயுத வல்லரசாக்கிய ஆளுமை, தங்க நாற்கரச் சாலை தந்த தங்கமகன் முன்னாள் பிரதமர் வாஜ்பாய் அவர்கள் காலமானார் என்பதை மனம் ஏற்க மறுக்கிறது. அவரது ஆன்மா சாந்தி அடைய இறைவனை ப்ரார்த்தித்துக் கொள்கிறேன். இந்த இழப்பை தாங்கிக் கொள்ள எனக்கு  பராசக்தியே சக்தி கொடு. 

அமுமுக துணை பொதுச் செயலாளர் டிடிவி தினகரன்:

சகோதர நேசத்தை முன்னிறுத்திய மனிதநேயம் கொண்ட மாமனிதர் திரு.வாஜ்பாய் அவர்களின் இழப்பு இந்திய தேசத்திற்கு பேரிழப்பாகும். அவரை இழந்துவாடும் அவரது உறவுகளுக்கும், அவர்பால் பற்றுக்கொண்டவருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக்கொள்கிறேன்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com