கேரளாவை சூழ்ந்த வெள்ளம்: அனைவருக்கும் தெரிய வேண்டிய சில உண்மைகள்

கேரள மாநிலத்தை வெள்ளம் சூழ்ந்து கொண்டு மக்களை திக்குமுக்காட வைத்துள்ளது. நூற்றுக்கணக்கானோரின் உயிரை பலி வாங்கிய இந்த பேரிடரில் இருந்து கேரளா விரைவில் மீண்டு வர வேண்டும் என்பதே அனைவரின் விருப்பம்.
கேரளாவை சூழ்ந்த வெள்ளம்: அனைவருக்கும் தெரிய வேண்டிய சில உண்மைகள்


கேரள மாநிலத்தை வெள்ளம் சூழ்ந்து கொண்டு மக்களை திக்குமுக்காட வைத்துள்ளது. நூற்றுக்கணக்கானோரின் உயிரை பலி வாங்கிய இந்த பேரிடரில் இருந்து கேரளா விரைவில் மீண்டு வர வேண்டும் என்பதே அனைவரின் விருப்பம்.

பிற மாநிலங்களில் இருந்து நீளும் உதவிக் கரங்களால் கேரள மாநிலம் நிச்சயம் இந்த பேரிடரில் இருந்து விரைவாக மீளும் என்று எதிர்பார்க்கலாம்.

கேரள மாநிலத்தில் வெள்ளம் சூழ்ந்துள்ள பகுதிகளின் புகைப்படங்களும், நிலச்சரிவு ஏற்படும் விடியோக்களும் சமூக தளங்களில் அதிகமாகப் பகிரப்பட்டு வருகிறது.

இந்த நிலையில், கேரள வெள்ளம் மனித சக்தியையும், பல முன்னோடிகளையும் நமக்கு வெளிச்சம் போட்டு காட்டியுள்ளது. எங்கோ ஓர் மூலையில் இருந்து உதவிக் கரம் நீட்டும் ஏழை முதல் உணவு சமைத்துக் கொடுக்கும் கண்ணுக்குத் தெரியாத மனிதம் முதல் நீள்கிறது இந்த பட்டியல்.

அவற்றில் எங்கள் கண்களில் பட்ட சில காட்சிகளை உங்களுடன் பகிர்ந்து கொள்கிறோம்.
கேரளாவில் வெள்ளம் பாதித்த மக்களை மீட்கும் குழுவில் முப்படை வீரர்கள் மட்டுமல்லாமல் பல்வேறு மீட்புப் படையினர், தன்னார்வலர்கள் ஈடுபட்டுள்ளனர்.

இந்த புகைப்படத்தில் கைக்குழந்தையுடன் முகத்தில் பெருமிதத்தோடு நடந்து செல்லும் நபர் யார் தெரியுமா? கேரள மாநில நிதித் துறை அமைச்சர் தாமஸ் இசாக்தான் இவர். முழு வீச்சில் மீட்புப் பணியில் ஈடுபட்டுள்ளார் இவர். வெள்ளைக் காலருடன் ஏசி அறையில் இருந்து கொண்டு கட்டளைகளை வழங்கிக் கொண்டிருக்காமல் வெள்ள நீரில் இறங்கி வேலை செய்து கொண்டிருக்கிறார் இவர்.

கேரளாவுக்கு உதவ அனைவரும் முன் வர வேண்டும் என்று ஐக்கிய அரபு நாடுகளின் துணை அதிபர் தன் நாட்டு மக்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார். கேரள பேரிடருக்கு உதவ உலக நாடுகளில் ஐக்கிய அரபு நாடுகள் முதல் ஆளாக முன் வந்திருப்பது வரவேற்கத்தக்கது.

குருத்வாரா ஸ்ரீ குரு சிங் சபா என்று அழைக்கப்படும் சீக்கிய குருத்வாரா கோயில் கொச்சியில் உள்ளது. இங்கு வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு அளிப்பதற்காக தொடர்ந்து உணவுகள் சமைக்கப்பட்டு விநியோகிக்கப்பட்டு வருகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com