74ஆவது பிறந்த தினம்: ராஜீவ் காந்தியின் நினைவிடத்தில் தலைவர்கள் மரியாதை

மறைந்த முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியின் 74ஆவது பிறந்த தினத்தையொட்டி, தில்லியில் உள்ள அவரது நினைவிடத்தில் தலைவர்கள் திங்கள்கிழமை மரியாதை செலுத்தினர்.
மறைந்த முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியின் 74ஆவது பிறந்த தினத்தையொட்டி, தில்லியில் உள்ள அவரது நினைவிடத்தில் மரியாதை செலுத்தும் ஐக்கிய முற்போக்குக் கூட்டணி தலைவர் சோனியா காந்தி, காங்கிரஸ் தலைவர் ராகுல்
மறைந்த முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியின் 74ஆவது பிறந்த தினத்தையொட்டி, தில்லியில் உள்ள அவரது நினைவிடத்தில் மரியாதை செலுத்தும் ஐக்கிய முற்போக்குக் கூட்டணி தலைவர் சோனியா காந்தி, காங்கிரஸ் தலைவர் ராகுல்


மறைந்த முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியின் 74ஆவது பிறந்த தினத்தையொட்டி, தில்லியில் உள்ள அவரது நினைவிடத்தில் தலைவர்கள் திங்கள்கிழமை மரியாதை செலுத்தினர்.
தில்லியில் யமுனை நதிக்கரையில் உள்ள வீரபூமியில் இருக்கும் ராஜீவ் காந்தி நினைவிடத்தில், முன்னாள் குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி, காங்கிரஸ் கட்சித் தலைவர் ராகுல் காந்தி, அவரது தாயாரும், ஐக்கிய முற்போக்குக் கூட்டணி தலைவருமான சோனியா காந்தி, ராகுல் காந்தியின் சகோதரி பிரியங்கா, பிரியங்காவின் கணவர் ராபர்ட் வதேரா, முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங், முன்னாள் மத்திய அமைச்சர் மணிசங்கர் அய்யர் உள்ளிட்டோர் நேரில் மலர் தூவி மரியாதை செலுத்தினர்.
இதேபோல், நாட்டின் பல்வேறு இடங்களிலும் ராஜீவ் காந்தியின் 74ஆவது பிறந்த தினத்தையொட்டி, அவருக்கு மரியாதை செலுத்தும் நிகழ்ச்சி நடைபெற்றது. சுட்டுரையில் ராகுல் காந்தி வெளியிட்டிருக்கும் பதிவுகளில், ராஜீவ் காந்தி அன்பு, நேர்மை, பாசமான மனிதர் ஆவார். அவரது மரணம், எனது வாழ்க்கையில் வெற்றிடத்தை ஏற்படுத்தி விட்டது. அவருடன் இருந்த நேரத்தை நான் தற்போது நினைவுகூருகிறேன். 
அவர் உயிருடன் இருந்த நேரத்தில், அவருடன் இணைந்து பல பிறந்த தினங்களை கொண்டாடியுள்ளோம். அவரை இழந்து விட்டோம். ஆனால், அவரது நினைவுகள் தொடர்கின்றன' என்று குறிப்பிட்டுள்ளார்.
ராஜஸ்தான் மாநில காங்கிரஸ் மூத்த தலைவர் சச்சின் பைலட், சுட்டுரையில் ராஜீவ் காந்திக்கு மரியாதை செலுத்தி பதிவு வெளியிட்டுள்ளார்.
கடந்த 1944ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 20ஆம் தேதி பிறந்த ராஜீவ் காந்தி, 1984ஆம் ஆண்டு முதல் 1989ஆம் ஆண்டு வரை பிரதமராக இருந்தார். இந்நிலையில், ஸ்ரீபெரும்புதூரில் கடந்த 1991ஆம் ஆண்டு மே மாதம் 21ஆம் தேதி அவர் படுகொலை செய்யப்பட்டார்.
சுட்டுரையில் ராஜீவுக்கு பிரதமர் மோடி மரியாதை
ராஜீவ் காந்தியின் 74ஆவது பிறந்த தினத்தையொட்டி, சுட்டுரை சமூகவலைதளத்தில் அவருக்கு மரியாதை செலுத்தும் வகையில் பிரதமர் நரேந்திர மோடி பதிவுகளை வெளியிட்டுள்ளார்.
அதில் அவர், ராஜீவ் காந்தியின் பிறந்த தினத்தையொட்டி, அவருக்கு எனது மரியாதையை செலுத்திக் கொள்கிறேன்; நாட்டுக்காக அவர் ஆற்றிய சேவைகளை நாங்கள் நினைவு கூருகிறோம்' எனத் தெரிவித்துள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com